உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ்வளம் -38

அவன் நெற்றிக்கண் நெருப்பால் எரிய, அவன் மனைவி இரதி வேண்டுதற்கு இரங்கி அவளுக்கு அவன் உருவுடன் விளங்கச் செய்தது.

வேம்பன் கரும்பு என்றதை மாற்றி, 'கரும்பொடு வேம்போர்வேள் எனச் சொல்லின்பம் படச் செய்தார். 'கரும்பு' 'வேம்பு' என்று அமைந்தது முரண்சுவை.

22. யானை எய்தது

(சோழனால் அனுப்பப் பெற்று மதுரையையும் பாண்டியனையும் அழிக்க வந்த கொடிய யானையை, இறைவன் வேடன் உருக்கொண்டு 'நரசிங்கக்கணை' ஏவி அழித்தது.)

நின்றமது ரேசனுமை நேசன் பசுபாசன்

அன்றமணர் விட்டவலி யானை யெய்தான் அம்மானை; அன்றமணர் விட்டவலி யானையெய் தான் ஆமாகில் என்றவற்கேன் தொண்டருக்கு ளேவெளிமை அம்மானை; ஏகவெளி யானின் றிருப்பதுமுண் டம்மானை.

(பொ

-

ரை) நிலை பெற்ற மதுரைக்கு இறைவனும், உமையம்மைக்கு அன்பனும், உயிர்களுக்கு அருளாளனுமாகிய சொக்கநாதன், சோழன் விருப்பப்படி சமணர்களால் விடப்பெற்ற வலிய யானையை அம்பால் எய்தான் அம்மானை; சமணர் களால் விடப்பெற்ற வலிய யானையை அம்பால் எய்தானே ஆனால், அப்படிப்பட்ட வலியவனுக்குத் தொண்டருக்குள்ளே எளிமையாகும் தன்மை ஏன் அம்மானை; (அவன் எளியன் மட்டுமல்லன்;) ஏக வெளியாக நின்று இருக்கவும் செய்வான் அம்மானை,

-

(வி ரை) நேசன் - அன்பன், பசு - உயிர்; பாசன் பாசத்தையுடையவன்; அமணர் -சமணர்; வெளிமை - எளிமை; வெளியாக இருக்கும் தன்மை. 'ஏக வெளியா நின்று இருப்பது முண்டு' என்றது ஏகாந்தன் என்பதை. தில்லையம்பலத்தில் 'வான் வெளியை' இறைவன் இருப்பாகச் சுட்டுவது கருதத்தக்கது. 'சிதம்பர ரகசியம்' என்பது இதனையே.

ஏக எளியான் -ஏகுதற்கு எளியான்; ஏகவெளி யானவன். (வெட்ட வெளியானவன்) வெளியா - வெளியாக (தொகுத்தல்) ஏகவெளியான் ஆகிய அவன் உருவமாய் நிற்கும் கோலமும், இருக்கும் கோலமும் கொண்டது உண்டு என்னும் பொருளும்