உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

195

கொள்க. "ஏக வெளியான் நின்று இருப்பதும் உண்டு" என்று கூறினாராகலின்.

23. விருத்த குமார பாலரானது

(கௌரி என்னும் சைவ சமயச் செல்விக்காக இறைவன் முதியனாகவும், வாலிபனாகவும், குழந்தையாகவும் வந்து அவள் பத்திப் பெருமையை வெளிப்படுத்தியது.)

ஏர்மதுரை யார்விருத்தர் இன்குமரர் பாலரெனப் பேர்கவுரி கண்டுநின்ற பேரொளியார் அம்மானை; பேர்கவுரி கண்டுநின்ற பேரொளியார் ஆமாகில் ஓர்விதியேன் காணான் ஒளியார் அம்மானை; ஒளியாரைக் காணாத தோர்விதியே அம்மானை.

(பொ-ரை) அழகிய மதுரைச் சொக்கர் முதியர், இனிய குமரர், பாலர் எனப் பேர்பெற்ற கவுரி என்பாள் கண்டு நின்ற பேரொளி வடிவினர் அம்மானை; கவுரி கண்டு நின்ற பேரொளி வடிவினர் ஆயினால், அவ்வொளி வடிவினரை ஒப்பற்ற நான்முகன் காணாதது ஏன் அம்மானை; ஒளி வடிவினராம் இறைவனைக் காணாததும் ஓர் விதியினாலே அம்மானை.

-

(வி - ரை) ஏர் அழகு; விருத்தர்,குமரர், பாலராகிய இறைவர் இறுதியில் ஒளி வடிவினராய்க் கௌரிக்குக் காட்சி வழங்கினாராகலின் 'பேரொளியார்' என்றார். அவளுக்குக் காட்சி வழங்கியவர் விதிக்கு (நான்முகனுக்கு)க் காண முடியாமல் ஏன் ஒளிந்து கொள்ளார் என்பதுமாம்.

ஒளியாரைக் காணாததும் (ஒளியாத வரை நேரில் நிற்பவரை)க் காணமுடியாமல் போனதும், ஒளி வடிவினரைக் காணமுடியாமல் போனதும்.

ஓர் விதியே -நான்முகன் பெற்ற ஒரு விதியேயாம். ஒரு படைப்புக் கடவுள் ஆவனோ என்னும் எள்ளலுமாம். விதியே என்பதிலுள்ள ஏகாரத்தை ஓகாரப் பொருளாக்கிக் கொள்க.

24. மாறியாடினது

(கூத்தில் வல்ல பாண்டியன் இராசசேகரன், தனக்குக் கால் வலி காண்பது போல, இறைவனுக்கும் கால் வலி காணுமே என வருந்தி ஊன்றிய திருவடியைத் தூக்கியாடுமாறும், தூக்கிய திருவடிவை ஊன்றி நிற்குமாறும் வேண்டியதற்கு ஏற்ப இறைவன் கால் மாறியாடினது.)