உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம் -38

பாடுபெறு மூன்று பதந்தூக்கி மேற்றூக்கி ஆடுபத மூன்றுவெள்ளி அம்பலவன் அம்மானை; ஆபேத மூன்றுவெள்ளி அம்பலவன் ஆமாகில் காடாங் கடம்புடையான் காலாறோ அம்மானை; காலாறென் றேவழுதி கண்டனன் முன் அம்மானை.

(பொ ரை) அலுத்துப் போக ஊன்றிய திருவடியைத் தூக்கி, அதனை மேலெடுப்பாக வீசி, ஆடிநிற்கும் திருவடியைப் பாண்டியனுக்காக ஊன்றி நிற்பான் வெள்ளியம்பலத் தாடும் இறைவன் அம்மானை; மேலே எடுத்தாடும் திருவடியை ஊன்றுவான் வெள்ளியம்பலவன் என்றால், கடம்பவனமுடைய அவன் கால்கள் (பதமூன்று, பதமூன்று என இருமுறை வருதலால்) ஆறோ அம்மானை; 'இறைவ நீ காலாறு றைவ நீ காலாறு" என்று பாண்டியன் வேண்டிக்கொண்டு, அவ்வாறே நேரில் கண்டு களித்தான் அம்மானை.

(வி-ரை) பாடு - அல்லல், சுமை. பாடுபெறு மூன்றுபதம் - பாடுபெறும் ஊன்று பதம் ஆடுபத மூன்று ஆடு பதம் ஊன்று. ஊன்று என்பது புணர்ச்சியால் மூன்று என இருமுறை வந்ததை எண்ணிக் 'காலாறு' என்றார். பாண்டியன் காலாறு என்றது 'காலின் களைப்பை ஆற்றிக் கொள்க' என்பதாம்.

'ஆடு பதம் ஊன்றும்' என்பதற்கு நயம் தோன்றக் 'காடாம் கடம்பு' என்றார். ஆடு பதம் ஊன்றி மரக்குழை தின்னுதல் உலக வழக்கு. காலுக்கும் ஆறுக்கும் உள்ள தொடர்பும் நினைக.

25. பழியஞ்சியது

(பழநாளில் செருகிக் கிடந்த அம்பு தைக்க ஒரு பார்ப்பனி இறந்தாள்.ஆனால் அருகில் நின்ற வேடனே கொன்றான் எனப் பார்ப்பனன் பாண்டியனிடம் முறையிட்டான்; வேடன் உண்மையை உரைத்துத் தான் குற்றமற்றவனெனச் சாதித்தான். இறைவன் ஆணையால் ஒரு திருமண வீட்டுக்குச் சென்று எமதூதர் பேசும் உரைகேட்டு உண்மையுணர்ந்தனர். பாண்டியன் மகிழ்ந்து பழியஞ்சிச் சொக்கரை வாழ்த்தினான்.)

வழிக்கொண்ட வேதனில்லாள் மாண்டவகை பாண்டியற்குப் பழிக்கஞ்சிச் சொக்கருண்மை பண்டுரைத்தார் அம்மானை; பழிக்கஞ்சிச் சொக்கருண்மை பண்டுரைத்தார் ஆமாகில்