உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

-

இளங்குமரனார் தமிழ்வளம் 38

(பொ-ரை) உலகு புகழும் சொக்கர் சோழனை எதிர் கொண்டு வரவேற்றுப் புதுமையான கோயில் மதிலுள் சேர்த்துத் திருவருள் நல்கினார் அம்மானை; மதிலுள் சேர்த்துத் திருவருள் நல்கினார் எனின், அவர் மதிற்கதவில் வைக்கப் பட்டிருந்த மீன் முத்திரையை நீக்கி அழகிய இடப முத்திரையைக் காவலாக இட்டது ஏன் அம்மானை; காவலாளர்கள் இழிவேதும் படுதலைக் காண விரும்புவரோ இறைவர் அம்மானை.

(வி-ரை) புவி -உலகம்; செம்பியன் - சோழன்; கவின் அழகு; இடபம்

காளை.

-

காப்பவரு மீனமுற - காப்பவரும் ஈனம் உற முத்திரை வைக்காவிடின் காப்பவருக்குத் தண்டனை வருமன்றோ; அதனால், அவ்விழிவு வாராதிருக்க;

காப்பவரும் மீனம் உற - காப்பவராகிய இறைவரும் தம் இடபக்குறி இருக்க மீனக்குறியிட; காண்பரோ காணார்.

-

முத்திரை அழிபாடுறின் காவலர்க்குத் தண்டனை வரும்; மீனக் குறியே இடுவிப்பின் தம் திருவிளையாடலை வேந்தன் அறிய வாய்ப்பு இல்லை; ஆகலின் இடபக் குறியிட்டு 'வினையால் வினையாக்கிக்" கொண்டார் இறைவர் என்க.

44

35. தண்ணீர்ப் பந்தல் வைத்தது

(காடு வெட்டிய சோழன் பாண்டிய நாட்டின்மேல் படையெடுத்து வந்தான். இறைவன் அருளியபடி இராசேந்திர பாண்டியன் சோழனை எதிர்த்துப் போரிடப் போனான்;

றைவன் தண்ணீர்ப்பந்தல் வைத்துப் பாண்டியப் படைக்கு நீர் வழங்கினான்.அந்நீரைப் பருகிய வீரர் ஊக்கமிக்கவராகப் போரிட்டுத் தம் வேந்தனுக்கு வெற்றி தந்தனர்; சோழனுக்கு மன்னிப்புத் தந்து விடுத்தான் பாண்டியன்.)

சொன்னமதில் சூழ்மதுரைச் சொக்கர்தண்ணீர்ப் பந்தர்வைத்துத் தென்னவன்சே னைத்தாகந் தீர்த்தனர்காண் அம்மானை; தென்னவன்சே னைத்தாகந் தீர்த்தனரே ஆமாகில் பொன்னருளேன் செய்யார் புலிக்கொடியாற் கம்மானை; புலியாங் கொடியவனைப் போற்றுவார் அம்மானை.

(பொ-ரை) பொன்மதில் சூழ்ந்த மதுரைச் சொக்கர் தண்ணீர்ப்பந்தல் வைத்துப் பாண்டியன் படைஞரின் நீர் வேட்கையைத் தவிர்த்தார் அம்மானை; பாண்டியன் படைஞர்