உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

திருவிளையாடல் அம்மானை

திருத்துமது ரைக்கடவுள் செவ்வேட்கு மென்முலைப்பால் அருத்துமட வார்க்களித்தார் அட்டசித்தி அம்மானை; அருத்துமட வார்க்களித்தார் அட்டசித்தி ஆமாகில் கருத்திலரென் றேன்செய்தார் கற்சாபம் அம்மானை; கற்சாபங் கைமேலாம் கர்த்தர்காண் அம்மானை.

203

(பொ-ரை) அடியார் குறையைக் களையும் மதுரைச் சொக்கர் திருமுருகனுக்குப் பாலூட்டிய கார்த்திகைப் பெண் களுக்கு ‘அட்டமாசித்தி' அருளினார் அம்மானை; பாலூட்டிய அவர்களுக்கு அட்டமாசித்தி அருளினாரென்றால், அவர்கள் உமையம்மையே அட்டமாசித்தியின் பொருள் என்பதைக் கருதினாரல்லர் என்று ஏன் அவர்களைக் கல்லாகச் சாபமிட்டார் அம்மானை; அவர் கற்சாபமாம் மலைவில்லைக் கையில் கொண்ட தலைவர் என்பதை அறிக அம்மானை.

-

(வி ரை) செவ்வேள் முருகன்; அட்டமாசித்தி அட்டசித்தி; அவை, "அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. கருத்திலர் - மெய்ப்பொருள், அறிகிலர்; கற்சாபம் - கல்லாகப் போகும் சாபம்;

கல்லாகிய (மலையாகிய) சாபம் (வில்) மேருமலையாகிய வில்.கர்த்தர் - தலைவர். 'கற்சாபம்' உடையவர் ஆதலின் உடையதை வழங்குதல் இயல்பாகலின் 'கற்சாபம்' வழங்கினார் என்றார்.

34. விடையிலச்சினை யிட்டது

(காஞ்சியை ஆட்சி புரிந்த காடு வெட்டிய சோழன் மதுரைக் கோயிலில் வழிபட விரும்பினான். இரவில் வடக்கு வாயிலைத் திறக்கச் செய்து அதன் வழியே அழைத்து வந்து வழிபடச் செய்தான் இறைவன். பின், அவ்வடக்கு வாயிலில் இருந்த மீன் முத்திரைக்குப் பதிலாக இடபமுத்திரை பொறித்தான். இஃதிறைவன் செயலென அறிந்த பாண்டியன் வியந்தான்.)

புவிபுகழ்ச்சொக் கேசரெதிர் போயழைத்துச் செம்பியனை நவமதிலுள் ஆக்கியருள் நல்கிவிட்டார் அம்மானை; நவமதிலுள் ஆக்கியருள் நல்கிவிட்டார் ஆமாகில் கவினிடப முத்திரையேன் காப்பினிட்டார் அம்மானை; காப்பவரு மீனமுறக் காண்பரோ அம்மானை.