உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ்வளம் -38

பொன் ஏது' என்றார். தனம் - செல்வம், மார்பு. உமையொரு பாகனாம் நிலையில் இறைவியின் பகுதியில் ஒருதனம் இருத்தலால் தனம் ஒருபக்கத்து என்றார். முதல் -போடுமுதல், முதல்வி. ஒரு பக்கத்து வந்து சார்ந்த முதல்; ஒரு பக்கத்து உவந்து சார்ந்த முதல்.

32. வளையல் விற்றது

(முனிவர் எழுவர் மனைவியரும் பெற்ற சாபத்தை நீக்கு வதற்காக, இறைவர் வளையல் வணிகராக வந்து வளைபோடு முகத்தால் தொட அவர்கள் சாபம் நீங்கியது)

நீடுகயற் கண்ணியங்கி நின்றசொக்க ரன்புவைத்துத் தேடு மவரவர்தம் சிந்தையுற்றார் அம்மானை; தேடு மவரவர்தம் சிந்தையுற்றார் ஆமாகில் கூடுவிட்டுக் கூடுசென்று கொள்வாரோ அம்மானை; கொள்ளவளை விற்றுமறு கூடுசென்றார் அம்மானை.

(பொ-ரை) நெடிய கயற்கண்ணியுடன் அங்கிமுன் நின்று மணங்கொண்ட சொக்கர் தம்மேல் அன்புகொண்டு தேடுபவர் உள்ளங்களிலெல்லாம் புகுந்தார் அம்மானை; தேடுபவர் உள்ளங்களிலெல்லாம் புகுந்தாராயினால், அவர் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து கொள்ள வல்லவரோ அம்மானை; அவர் அவ்வாறு கொள்ள வளையல் வணிகராகி மறுகூடுசென்று (தெருவூடு சென்று) விற்றார் அம்மானை.

(வி-ரை) அங்கிநின்ற - நெருப்பின்முன் நின்ற; திருமணக் கோலத்தில் நின்ற. அங்கயற்கண்ணியை மணந்தவர் அன்பர் கூட்டுள் புகுந்தார் எனப் பழிப்பதுபோல் புகழ்ந்தார். உடல், கூடு' ஆகலின் பிறருள்ளத்துப் புகுதலைக் கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்றார். அச்சொல் நயம் விளங்க மறுகூடு (தெருவூடு) சென்றார் என்றார்.

மறுகூடு -மற்றவர் கூடு, தெருவூடு,(மறுகு + ஊடு). கொள்ளவளை கொள்ளுமாறு வளையல்; நிரம்ப வளையல்.

33. அட்டமாசித்தி உபதேசித்தது

(அட்டமாசித்தியின் பொருளாவார் உமையம்மை என்பதை மறந்த கார்த்திகை மகளிர் அறுவரும் சாபம் பெற்றுப் பாறையாகிப் பட்டமங்கலம் என்னும் ஊரில் கிடந்தனர். அவர்க்கு இறைவர் சாபம் கெடுத்து அட்டமாசித்தி அருளியது)