உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் அம்மானை

201

(பொ-ரை) நிலைபெற்ற வாழ்வினராகிய சொக்கர் தம் அடியராகிய மந்திரத் தலைவனுக்காகப் பாண்டிய வேந்தனின் முன் ஏழுலகினரும் போற்றுமாறு படையுடன் வந்து மெய்ச் சான் ன்று காட்டினார் அம்மானை; ஏழுலகோரும் போற்றுமாறு மெய்ச்சான்று காட்டினாராயினால், சூழ்ச்சிமிக்க பகைவனாக அன்று வந்தவன் தோற்றுப் போனானோ அம்மானை; ஆம் தோற்றுப் போனவனையும் விட்டாரோ? அவனைச் சுழற்றி யறைந்து கொல்வித்தார் அம்மானை.

(வி-ரை) மெய்க்காட்டு - மெய்ச்சான்று. தோற்றானே- தோல்வி கண்டானோ, தோன்றமாட்டானோ. பகையாய் வந்தவன் - சேதிராயன் என்னும் வேடர் தலைவன், பகைவனாகப் பாண்டியன்மேல் படைகொண்டு வந்தான். அவன் இறைவன் ஏவலால் புலியால் தாக்கப்பட்டு இறக்கப், படை ஓடிப்போயது.

தோற்றானை விட்டு - போரில் தோன்றாத அவனை விட்டு; ஆரோ சுற்றினார் எவரோ அழித்தார்? அவன் வினையே அவனைக் கொன்ற தென்க.

-

31. உலவாக்கிழி அருளியது

(வேதம் வேள்வி முதலியவற்றை நிறைவேற்றுதற்காக இறைவன் குலபூடண பாண்டியனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத பொன்முடிப்பு அளித்தது.)

அலரா யிரந்தார் அணிமதுரைச் சொக்கர்தென்னற் குலவாக் கிழிப்பொன் உதவினார் அம்மானை; உலவாக் கிழிப்பொன் உதவினரே யாமாகில் தலையால்இரந் தார்க்குத் தனமேதோ அம்மானை; தனமொருபக் கத்துவந்து சார்ந்தமுதல் அம்மானை.

-

(பொ ரை) மலர்மிக்க மாலையணிந்த மதுரைச் சொக்கநாதர், பாண்டியனுக்கு என்றும் எடுக்கக் குறையாத பொன் முடிப்பு உதவினார் அம்மானை; குறையாப் பொன் முடிப்பு உதவினாரேயானால், தலையோட்டால் இரந்துண்ணும் அவர்க்குச் செல்வம் எதுவோ அம்மானை; அவர்க்குச் செல்வம் அவர்க்கு ஒரு பாகமாக வந்தமர்ந்த முதல்வியே அம்மானை.

(வி - ரை) அலர் - மலர்; தார் -மாலை; உலவா - குறையாத ; முடிப்பு; தலையால் இரந்தார் என்றது, நான்முகன் தலையோட்டால் இரந்தது. 'இரக்கும் வறியவர்க்குக் குறையாப்

கிழி