உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ்வளம்-38

29. மாயப் பசுவை வதைத்தது

(சமணர்கள் ஏவிய மாயப்பசுவை, இறைவன் நந்தி தேவனை அனுப்பி அழித்தது. அப்பசு மாய்ந்து மலையாயதே பசுமலை என்பது கதை)

தாயைப்போல் வான்மதுரை தன்னை அழிக்கவந்த மாயப் பசுவை வதைசெய்தான் அம்மானை;

மாயப் பசுவை வதைசெய்தான் ஆமாகில்

வேயொப்பார் தோளிபங்கன் மெய்க்கோவே அம்மானை; மெய்க்கோவும் பொய்க்கோவை வெல்லாதோ அம்மானை.

(பொ

P

ரை) தாயைப் போன்றவனாகிய இறைவன் மதுரையை அழிக்கவந்த பொய்ப்பசுவைக் கொன்றான் அம்மானை; பொய்ப்பசுவைக் கொன்றானே ஆயினால், மூங்கிலுக்கு ஒப்பாக அமைந்த தோளையுடைய உமையொரு பாகன் மெய்யான பசுவேயாம் அம்மானை; மெய்யாய பசுவாகியது, பொய்யாப் பசுவாகியதை வெற்றிகொள்ளாதோ அம்மானை.

ம்

(வி-ரை) வேய் ஒப்பு ஆர்- மூங்கிலுக்கு ஒப்பாக அமைந்த; தோளி-தோளையுடையவள்; பங்கன் - கணவன் மெய்க்கோ - மெய்யான பசு; மெய்யான தலைவன்; பொய்க்கோ-பொய்யான பசு; பொய்த் தலைவன். 'கோ' இறைவனுக்கும் பசுவுக்கும் ரட்டுறல். சமண் சமயத்தார் ஏவலை வெற்றி கொண்ட வீறு நோக்கி 'மெய்க்கோவும் பொய்க்கோவை வெல்லாதோ?' என்றார்.

30. மெய்க்காட்டிட்டது

(குலபூடண பாண்டியன் தளபதி சவுந்தர சாமந்தன். அவன் படையைப் பெருக்கத் தந்த பணத்தைத் திருக்கோயில் திருப்பணிக்குச் செலவிட்டான். பின்னர் படைகள் எங்கே என்று நெருக்க இறைவன் படைகளைத் திரட்டி வந்து மெய்ப்பித்தது.)

வாழுமது ரேசரன்பு மந்திரிக்கா மன்னவன்முன்

ஏழுலகோர் போற்றமெய்க்காட் டிட்டனர்காண் அம்மானை; ஏழுலகோர் போற்றமெய்க்காட் டிட்டனரே யாமாகில் சூழ்பகையாய் அன்றுவந்தான் தோற்றானோ அம்மானை;

தோற்றானை விட்டாரோ சுற்றினார் அம்மானை.