உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

அழகாக.

திருவிளையாடல் அம்மானை

ஒரு பாகம்

199

ஒரு பக்கம்; ஒரு பாக நீளம். அழகா

28. நாகம் எய்தது

(கொடிய அரக்கன் ஒருவன் பாம்பின் வடிவம் கொண்டு மதுரை நோக்கி வந்தான். இறைவன் அருளால் அனந்த குணபாண்டியன் அப்பாம்பை அம்பால் அடித்துக் கொன்றான். அப்பாம்பின் நஞ்சு கொடுமையாய்ப் பரவ இறைவன், அமுத கதிர் பொழிந்து நஞ்சைக் கெடுத்தான்.)

வென்றிமரு வாரசனி வெள்ளிமன்று ளானமணர் பொன்றவிடும் பாம்பு தனையெய்தான் அம்மானை; பொன்றலிடும் பாம்பு தனையெய்தான் ஆமாகில் சென்றுசெவ்வாய் எய்தவன்கண் டிங்களோ அம்மானை; திங்களுமெய் தான்கனலுஞ் செங்கதிரோ டம்மானை.

P

(பொ ரை) வெற்றியாளனும் பகைவர்க்கு இடி போன்றவனும் வெள்ளியம்பலத்து ஆடுபவனும் ஆகிய இறைவன் பாண்டியனை ஏவி மதுரையார்அழிந்து படுமாறு சமணர் விடுத்த பாம்பை அம்பால் எய்து அழித்தான் அம்மானை; அழிக்கவிடப்பெற்ற பாம்பை எய்து அழித்தான் என்றால், செவ்வையாய்ச் சென்று படுமாறு எய்தவன் ஏவிய கணை திங்களோ அம்மானை; திங்கள் கண்ணாதல் மெய்தான்; அதனுடன் தீயும் செங்கதிரும் கண்களாம் அம்மானை.

(வி - ரை) மருவார் பகைவர்; அசனி -இடி; அமணர் சமணர் ; செவ்வாய் -செவ்வையாய்; திங்கள் என்றதற்கு ஏற்பக் கிழமைப் பெயர் நயம் பொருந்தச் செவ்வாய் என்றார். திங்களின் அமுதைப் பொழிந்து நஞ்சை அழித்தமையால் 'திங்களைக் கணை' என்றார். கண் என்பது கணைக்கு உவமையாகு பெயர். பாம்புப் பகை திங்கள் என்பது வழக்கு.

இறைவன் முக்கண்ணன் ஆதலின் அக்கண்கள் 'திங்கள், ஞாயிறு,தீ ' என மூன்றையும் கூறினார். திங்களுமெய்தான்: திங்களும் எய்தான் - திங்கள் பிறைபோன்ற கணையால்

எய்தான்

திங்களும் மெய்தான் -திங்கள் என்பதும் மெய்தான்

பிறைமுகக் கணையை ஏவிப் பாண்டியன் கொன்றமையால் இவ்வாறு கூறினார்.