உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

-

(வி - ரை) ஆ -இரக்கக் குறிப்பு. வள்ளல் - கூறவொண்ணாக் கொடுமை செய்த கயவனுக்கும் அருளிய பேரருள் பெருக் குணர்ந்து வள்ளல் என்றார்.

சாபமலையாயவர் பால்: சாபம் மலையாய் அவர்பால்; சாபம் - பழி; மலையாய் - மலைபோல். அடியார் பாவங்களை யெல்லாம் தாம் தாங்குதலால் சாப மலையாயவர்; சாபம் (வில்) மலையாயவர் - மேருமலையை வில்லாக உடையவர்.

சத்தியந்தப்பாக நின்றால் -சத்தியம் தப்பாக நின்றால்; சத்தி அந்தப் பாகம் நின்றால்

"திருவருட்சத்தியை உடனாகக் கொண்டவராகலின் அப்பாவம் சாராதோ" என்றார். 'சத்தியுடனாகி நிற்றலால் இரக்கமிக்கவராய் அருள்புரிந்தார்" என்க.

27. அங்கம் வெட்டியது

(வாளாசிரியன் ஒருவனிடம் சித்தன் என்பான் பயின்றான். அவன், ஆசிரியன் மனையாள்மேல் ஆசைகொண்டான். இறைவன் அவ்வாசிரியன் உருவில்வந்து சித்தன் கண், மார்பு, நா ஆகிய வற்றை வெட்டிப் பிளந்தான்.)

கொத்தலங்கற் சொக்கர் குருமனைவிக் காசைவைத்த சித்தனங்கம் வெட்டிச் செயித்தனர்காண் அம்மானை;

சித்தனங்கம் வெட்டிச் செயித்தனரே ஆமாகில் உத்தமமா னார்கைக் குயர்வாளே தம்மானை;

உயர்வாள் ஒருபாகம் உண்டழகா அம்மானை.

(பொ-ரை) பூங்கொத்தாலாகிய மாலையை அணிந்த சொக்கர், வாளாசிரியன் மனைவிமேல் ஆசைவைத்த சித்தன் என்பானின் உடலை வெட்டி வெற்றி கொண்டனர்காண் அம்மானை; சித்தன் உடலை வெட்டி வெற்றி கொண்டாரே ஆனால், உயர்ந்த மானைக் கையில் தரித்த அவர்க்கு 'உயர்வாள்' ஏது அம்மானை; உயிர்வாளாகிய உமை, ஒரு பாகத்தில் அவருக்கு அழகாக உண்டு அம்மானை.

-

(வி - ரை) அலங்கல் - மாலை; உத்தமமானார் கைக்கு - உயர்ந்தவர் கைக்கு, உத்தம மான் ஆர் கைக்கு உயர்ந்த மான் இருக்கும் கைக்கு.

உயர்வாள் -உயர்ந்தவாள்; உயர்ந்தவளாம் உமையம்மை.