உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

இளங்குமரனார் தமிழ்வளம் - 38 ஓ

(வி-ரை) பொன்னனையார் - பெயர். (மாசிலர்) - மாசு + இலர். குற்றம் இல்லாதவர்; பொன் இல்லாதவர் (மாசு - பொன்) குற்றம் என்னும் பொருள்தரும் 'காசு' என்பதும் 'பொன்' என்னும் பொருள் தரும். 'மாசு' என்பதும் 'மாசை, மாடை' எனப் பொன் பொருள் தரும் சொற்களாயின.

வாதத்தார் இரசவாதத்தார்; 'வாதக்காலாம் தமக்கு' என்பராகலின் தூக்கிய காலுடையவர் என்பதுமாம். ஐயமற ஐயமின்றி. ஐயர் -தலைவர், பெரியவர். பித்தர் எவ்வாறு இரசவாதம் செய்யவல்லார் என்றார்க்கு, ஐயரென்றும் பேசுவர் என்றார். ஐயமறப் பித்தர்-ஐயம் அறபித்தர் (என்பார்). ஐயமறப் பித்தர் என்பார் மறம் - பாவம்; பித்தரென்பாரையர் -பித்தர் என்பார் ஐயர்.

பித்தர் என்பு ஆர் ஐயர் பித்தராகிய அவர் எலும்பு மாலையணிந்த தலைவர்.

37. சோழனைமடுவில் வீட்டியது

(சுந்தரேச பாதசேகர பாண்டியனுக்கும் சோழனுக்கும் போர் நிகழ்ந்தது. சோழன் படைக்கு ஆற்றாமல் பாண்டியன் அஞ்சி ஓடினான். சோழனும் ஓடித் தாக்கினான்; இறைவன் அருளால் ஊடே ஒரு மடு உண்டாகியது; சோழன் அதில் வீழ்ந்து இறந்தான்.)

ஊழ்வினைதீர்த் தன்பர் உயிர்க்குயிராய் நின்றோங்கி வாழ்கடவு ளார்தென் மதுரேசர் அம்மானை; வாழ்கடவு ளார்தென் மதுரேசர் ஆமாகில்

கீழ்மடுவில் கூழ்த்ததென்ன கிள்ளிதனை அம்மானை கிள்ளிவலி கண்டுபொறுக் கின்றதரி தம்மானை.

-

(பொ ரை) அழகிய மதுரைச் சொக்கர், அடியார் வினைகளைத் தீர்த்து அவர் உயிருக்கு உயிராக நின்று உயர்ந்து வாழும் கடவுளாவர் அம்மானை; உயர்ந்து வாழும் கடவுளார் அவரானால், சோழனை ஆழ்ந்த மடுவில் (பள்ளத்தில்) வீழ்த்தி அழித்ததென்ன அம்மானை; அச்சோழனின் வலிமை கண்டு பாண்டியன் அழிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமையால் அம்மானை.

(வி-ரை) உயிர்க்குயிராய் வாழ்பவர் கிள்ளியை அழிக் கலாமோ என்றார்க்குக் 'கிள்ளி வலி கண்டு பொறுக்கின்றது அரிது' எனக் காரணம் காட்டினார். அவன் வலிமை பாண்டியனை