உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

237

கொண்ட கழலும் எலும்புமாலை அணிந்த சொக்கலிங்கப் பெருமானைக் கூடி இன்புறுவாய்.

இது.

இது குறத்தி தலைவிக்குக் கூறிய குறியாகும். மேல் வருவதும்

(அ - ள்) குங்குமம் - செஞ்சாந்து; பங்கயம் - தாமரை; மறை வேதம்; பண் - இசை ; பங்கன் - கணவன்; அங்கன் - எலும்பு மாலை அணிந்தவன். அமரர் உடலினின்று கழன்ற எலும்பு மாலையை இறைவன் அணிந்தான் என்பது கதை. சொக்கலிங்கன், மதுரையில் கோயில் கொண்ட இறைவன் திருப்பெயர். மேவுதல் - அடைதல், பொருந்துதல். கொல்லிப் பாவை கொல்லிப் பாவை போன்ற தலைவி.

சிந்து (வேறு)

5. வஞ்சி யேஅப ரஞ்சி யேமட மயிலே வரிக்குயிலே

கொஞ்சி யேபழி யஞ்சி யாருனைக் கூடுவார் இனியம்மே.

(தெ-ரை.) அம்மே, வஞ்சிக் கொடி போன்றவளே, உருக்கிவிட்ட பொன் போன்றவளே, மெல்லிய மயில் போன்ற வளே, இசைபாடும் இனிய குயில் போன்றவளே இனிச் சொக்க நாதர் உனைக் கொஞ்சிக் கூடுவார்.

(அ - ள்) வஞ்சி - வஞ்சிக்கொடி; அபரஞ்சி - உருக்கிவிட்ட பொன்; மடம் - மென்மை; வரி -இசைப்பாட்டு; அழகுமாம்; பழியஞ்சியார் : பெயர், சொக்கநாதர். "அம்மே பழியஞ்சியார் உனைக் கொஞ்சியே கூடுவார்" என இயைக்க.

சிந்து (வேறு)

6. புழுகாலே தரைமெழுகு பிள்ளை யார்வை பொற்கோலம் இட்டுநிறை நாழி வையாய்.

(தெ-ரை.) அம்மே, புழுகி (புனுகி)னால் தரையை மெழுகு; பிள்ளையார் பிடித்துவை; அழகிய கோலம் இட்டு; நிறைநாழியும் வைப்பாயாக.

-

(அ - ள்.) பொன் அழகு; நிறைநாழி நெல் நிறைத்து வைக்கப் பெற்ற நாழி. நாழி - முகத்தலளவைக் கருவிகளுள் ஒன்று.

இது குறிகூறும் களம் அமைக்கக் கூறியது.