உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

இளங்குமரனார் தமிழ்வளம் சிந்து (வேறு)

-

38

7. ஆழிகைதா அழகாரும் அங்கயற்கண் அம்மைபங்கர் அழகியசொக்க ரருள்புரிவருன் பான்மருவி அம்மே.

(தெ-ரை.) அம்மே, மோதிரம் அணிந்த கையைத் தா; அழகமைந்த அங்கயற்கண் அம்மையை இடப்பாகங் கொண்ட அழகிய சொக்கநாதர் உன்னிடம் வந்து அருள் செய்வார்.

(அ - ள்.) ஆழி கணையாழி, மோதிரம்; கை தா என்றது குறிபார்த்துக் கூறுதற்குக் கையைக் காட்டுதல் வேண்டி; அழகு ஆரும் -அழகு அமைந்த; உன்பால் மருவி - உன்னிடம் வந்து," அம்மே, சொக்கர் உன்பால் மருவி அருள்புரிவர்" என இயைக்க, ஆழிக்கை என்பது 'ஆழிகை' என நின்றது.

இதுவும் குறி கூறியது.

சிந்து (வேறு)

8. பேசும் என்குறி மோசம் என்றிடில் ஆர்சொ லும்பரி யாசமே

வாச மென்குழலாய் சவுந்தர

மாறர் வந்தணை வாரமே.

(தெ-ரை.) அம்மே, கூறும் என் குறி பொய்யாம் எனில் எவர் சொல்லும் நகைப்புக் குரியதேயாம். மணமிக்க மெல்லிய கூந்தலையுடையவளே! சுந்தர பாண்டியராம் சிவபெருமான் உன்னை வந்து கூடுதல் உறுதியாம்.

(அ - ள்.) ஆர் சொலும் -எவர் சொல்லும் சொல்லும். சவுந்தரமாறர் சுந்தர பாண்டியர், சௌந்தர பாண்டியர். சிவபெருமான் சுந்தர பாண்டியராகத் திருவவதாரம் செய்தது குறித்தது. அமே -அம்மே.

சிந்து (வேறு)

9. நங்கை நீகரு துங்கறி சொல்லவுன் செங்கை தனைக்கொடு வாஎங்கள் அங்க யற்கண்ணி பங்கர் அருட்சொக்க லிங்கர் இனிஅணை வார்அம்மே.