உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

239

(தெ-ரை) பெண்டிருள் சிறந்தவளே, நீ எண்ணும் குறியை யான் சொல்லுமாறு உன் சிவந்த கையைக் கொண்டுவந்து காட்டு; எங்கள் அங்கயற் கண்ணியின் கணவராய் அருளாளர் சொக்கலிங்கப் பெருமான் விரைவில் உன்னைக் கூடுவார் அம்மா.

(அ கூடுவார்.

-

ள்.) கொடுவா

-

கொண்டுவா. அணைவார்

சிந்து (வேறு)

10. தூசும்ஒரு காசும்வைஉள் நேசம்வர வேசொல்லநான் ஈசர்கயி லாசர்மது

ரேசர்உனைச் சேர்வாரம்மே.

(தெ-ரை) அம்மா, உள்ளன்பு பெருக ஓர் ஆடையும் ஒரு காசும் நான் குறி சொல்வதற்குக் காணிக்கையாக வை; இறைவரும் கயிலாயத் துறைபவரும் ஆகிய சொக்கநாதர் உன்னைச் சேர்வார்.

(அ - ள்.) தூசு - ஆடை; உள்நேசம் வரத் தூசும் காசும் நான் (குறி) சொல்ல வை; மதுரேசர் உனைச் சேர்வர் என இயைக்க.

இது குறிபார்க்கக் காணிக்கை வேண்டியது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

11. கைக்குறியின் முகக்குறிநன்(று); இடத்தெழுந்த கவுளிநன்று; கன்னி மார்வந்(து)

இக்குறிநன் றென்கின்றார்; இடக்கண்ணும்

துடிக்கின்றது; இதன்மேல் உண்டோ?

பொய்க்குறிய சிறுமருங்குற் பூங்கொடிநீ

அங்கயற்கண் பூவை மாதின்

மெய்க்குறியும் வளைக்குறியும் முலைக்குறியும்

அணிந்தவர்தோள் மேவு வாயே.

(தெ-ரை.) இல்லையோ என்னுமாறு அமைந்த மிகச் சிறிய இடையையுடைய பூங்கொடி போன்றவளே, உன் கைக் குறியினும் முகக்குறி நலமுடையது; இடப் புறத்தே எழுந்த பல்லி சொல்லும் நலமுடையது; அன்றியும் தேவ கன்னியர் எழுவரும்