உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

வந்து இக்குறிகள் நல்லவை என்று கூறுகின்றார்; இடக் கண்ணும் துடிக்கின்றது; இவற்றின் மேலும் நற்குறிகள் உளவோ? இல்லை. நீ அங்கயற் கண்ணியாகிய பசுங்கிளியின் உடற்குறியும் வளையற் குறியும் மார்புக்குறியும் அணிந்தவராகிய சொக்கநாதரின் திருத்தோளைச் சேர்தல் உறுதியேயாம்.

-

(அ - ள்.) கவுளி - பல்லி; கன்னிமார் -சப்த(ஏழு) கன்னியர்; பொய்க்குறிய சிறு மருங்குல் -இல்லை என்று சொல்லுமாறு அமைந்த குறுகிய இடை; பூவை கிளி; அம்மையைப் "பசுங்குதலை மழலைக் கிளியே" என அழைக்கும் மீனாட்சி யம்மை பிள்ளைத் தமிழ் (63). இறைவர், அம்மையின் மெய்க்குறி வளைக்குறி முதலியவை பெற்றமை. சீகாளத்திப் புராணம் தழுவக் குழைந்த படலத்தில் கண்டது.

கொச்சகக் கலிப்பா

12. கடமலைக்கும் வெம்மலையாம் கைம்மலையும் ஆயிரவாய்ப் படமலைக்கும் அரவரசும் பரித்தருளும் பார்மடந்தை குடமலைக்கும் தடமுலையாம் குலமலைகள் இரண்டெனவும் வடமலைக்கும் தென்பொதியும் மலயமலை என்மலையே.

(தெ-ரை.) (அம்மே) மதத்தால் அலைக்கப்படும் கொடிய மலை போன்ற திசை யானைகள் எட்டையும், ஆயிரம் என்னும் எண்ணிக்கையுடைய பெரிய படங்களை எடுத்தாடும் ஆதிசேடன் என்னும் பாம்பையும் தாங்கிக் காக்கும் நில மகளின் குடத்தை வருத்தும் பெரிய மார்புகளாம் சிறந்த மலைகள் இரண்டெனக் கூறத்தக்க இமயமலைக்கும் அழகு குடிகொண்ட பொதியமலை என் மலையாகும்.

(அ - ள்.) கடம் -மதம்; கைம்மலை யானை; அரவரசு - ஆதிசேடன்; பரிந்து - தாங்கி; தென் - அழகு.

இதுவும் குறி கூறுவாள் தன் மலைச் சிறப்புக் கூறியதாம். மேல் வருவனவும் (13-16) இது.

கொச்சகக் கலிப்பா

13. திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மைதிரு அருள்சுரந்து பொழிவதெனப் பொங்கருவி தூங்குமலை பொதியமலை என்மலையே.