உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

241

(தெ-ரை) அம்மே, திங்களைத் தன் முகட்டில் முடிபோலச் சூடிக் கொள்ளும் மலை; தென்றற் காற்று இனிது தவழும் மலை; நீர் கொண்ட மேகம் சூழ்ந்து கிடக்கும் மலை; தமிழ் வளர்த்த முனிவனாம் அகத்தியன் வாழும் மலை; அங்கயற்கண் அம்மையின் திருவருட் பெருக்கே பெருகி வழிவதுபோலக் கரைதாவி எழுந்து அருவி பொழியும் மலை பொதிய மலையாகும். அப் பொதிய மலையே என் மலையாகும்.

(அ ள்) புயல் - மேகம்; பொங்கு அருவி -நீர் பொங்கி மேலெழும் அருவி; அருவி தூங்குதல் - அருவி இடையீடின்றிப் பொழிதல்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

14. கன்ன மதம்பெய்)து) உறங்குகொலைக்

களிறு கிடந்து பிளிறுமலை;

தென்னந் தமிழும் பசுங்குழவித்

தென்றல் கொழுந்தும் திளைக்குமலை;

அன்னம் பயிலும் பொழியற்கூடல்

அறலங் கூந்தல் பிடியாண்ட

பொன்னங் குடுமித் தடஞ்சாரல்

பொதிய மலையென் மலையம்மே.

(தெ-ரை.) அம்மே, காதுகளில் இருந்து மதம் பொழிய உறங்கும் பகையைத் தொலைக்கவல்ல ஆண் யானை படுத்துக் கிடந்து பிளிறுமலை; அழகும் இனிமையும் அமைந்த தமிழ் மொழியும், மிக மெல்லிய இனிய தென்றலாகிய குழந்தையும் தவழும் மலை; அன்னங்கள் நெருங்கி உலாவும் சோலைகளை யுடைய மதுரையில் கோயில் கொண்ட கருமணல் போன்ற அழகிய கூந்தலையுடைய பெண்யானை போன்ற மீனாட்சி யம்மை ஆட்சி செலுத்திய அழகிய பொன் போன்ற முகடுகளை யும் அகன்ற சாரல்களையும் உடைய பொதியமலை என் மலையாகும்.

(அ - ள்.) கன்னம் காது; தென்னந் தமிழ் (தென் அம் தமிழ் ) தென் - அழகு, இனிமை; பயிலும் - நெருங்கும்; அறல் - - மணல்;பிடி - பெண்யானை (மீனாட்சியம்மை); தடம் சாரல் அகன்ற சரிவு.