உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

15. மந்தமா ருதம்வளரும் மலைஎங்கள் மலையே; வடகலைதென் கலைபயிலும் மலைஎங்கள் மலையே; கந்தவேள் விளையாடும் மலைஎங்கள் மலையே; கனகநவ மணிவிளையும் மலைஎங்கள் மலையே;

HHHHH||||||||||1

KIINIINIKIIKIHIHI

dé à dà è è dé à è dié à dé à ê dê é à dé à dé à

இந்தமா நிலம்புரக்கும் அங்கயற்கண் அம்மை இன்பமுறும் தென்பொதிய மலைஎங்கள் மலையே.

(தெ-ரை.) அம்மே, மெல்லிய தென்றல் காற்று உலாவும் மலை எங்கள் மலையாகும்; வடமொழியும் தென்மொழியும் ணைந்து விளங்கும் மலை எங்கள் மலையாகும்; முருகப் பெருமான் (மயிலேறி) விளையாடி மகிழும் மலை எங்கள் மலையாகும்; பொன் முதலாய ஒன்பான் மணிவகைகளும் விளையும் மலை எங்கள் மலையாகும்......... இவ் வுலகைப் பேரருளால் காக்கும் அங்கயற்கண் அம்மை, திருநோக்குக் கொண்டு மகிழும் அழகிய பொதியமலை எங்கள் மலையாகும்.

+

(அ - ள்) மந்த மாருதம்-இளந்தென்றல் காற்று; வளரும் -பெருகும்; கலை - மொழி; கந்தவேள் - முருகன்; கனகம் - பொன்; நவமணி-ஒன்பான் மணிகள்; புரக்கும் - காக்கும்; தென் - அழகு இப் பாடலின் மூன்றாம் அடி கிடைத்திலது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

16. சிங்கமும் வெங் களிறுமுடன் விளையாடும் ஒருபால்; சினப்புலியும் மடப்பிணையும் திளைத்திடும்அங் கொருபால்; வெங்கரடி மரையினொடும் விளையாடும் ஒருபால்;

விடஅரவும் மடமயிலும் விருந்தயரும் ஒருபால்; அங்கணமர் நிலம்கவிக்கும் *வெண்கவிகை நிழற்கீழ் அம்பொன்முடி சூடும்எங்கள் அபிடேக வல்லி செங்கமலப் பதம்பரவும் கும்பமுனி பயிலும்

தென்பொதிய மலைகாண்மற் றெங்கள்மலை அம்மே.

  • பாட வேறுபாடு : வெங்கவிகை.