உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

243

(தெ-ரை.) அம்மே, அழகிய இடமகன்ற நிலத்தை எல்லாம் தன் நிழலால் போர்த்துக் கொண்டிருக்கும் வெண் கொற்றக் குடையின் நிழற்கீழே அழகிய பொன்முடி சூடி ஆட்சி புரியும் எங்கள் மீனாட்சியம்மையின் செந்தாமரை போன்ற திருவடிகளை வணங்கும் அகத்திய முனிவர் தங்கும் அழகிய பொதியமலை எங்கள் மலையாகும்; அப் பொதிய மலையில் சிங்கமும் கொடிய யானையும் இணைந்து ஒரு பக்கத்தே விளையாடும்; சினமிக்க புலியும் மெல்லிய பெண்மானும் கூடி ஒரு பக்கத்தே மகிழும்; கொடிய கரடி மரை என்னும் மானுடன் சேர்ந்து ஒரு பக்கத்தே விளையாடும்; நஞ்சுடைய பாம்பும் அதற்குப் பகையாம் மெல்லிய மயிலும் விரும்பி ஒரு பக்கத்தே விருந்து கொண்டாடும்.

-

(அ - ள்.) வெங்களிறு - கொடிய களிறு; ஒருபால் -ஒரு பக்கம் ; படம் மென்மை; இளமையுமாம். மரை - மானின் ஒருவகை; அம் கண் அமர் -அழகிய இடம் அமைந்த; அபிடேக மீனாட்சியம்மை; கும்பமுனி - அகத்தியன்; பதம் - திருவடி; பரவும் -வணங்கும்; காண் - அறிவாயாக. கும்பமுனி பயில்தலும் அன்னை அருள்தலும் மாறுபட்டவையும் கூடி மகிழக் காரணமாயினவாம்.

வல்லி

-

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

17. கச்சைப் பொருது மதர்த்தெழுந்து

கதிர்த்துப் பணைத்த மணிக்கொங்கைப் பச்சைப் பசுங்கொம்(பு) அங்கயற்கண் பாவை பயந்த ஆறிருதோள் செச்சைப் படலை நறுங்குஞ்சிச்

சிறுவன் தனக்குப் பெருந்தடங்கண்

கொச்சைச் சிறுமி தனைக்கொடுத்த

குறவர் குலம்எம் குலம்அம்மே.

(தெ- ரை) அம்மே, மார்புக் கட்டினைத் தாக்கி அடங்காது எழுந்து நிமிர்ந்து பருத்த அழகிய மார்புகளையுடைய பச்சைப் பசுங்கொடியாகிய அங்கயற்கண் அம்மை பெற்ற பன்னிரு தோளையும் வெட்சி மாலை சூடிய மணமிக்க குடுமியையும் உடைய ளைய முருகனுக்குப் பெரிய அகன்ற கண்ணை யுடைய மழலைச் சிறுமியாம் வள்ளி நாச்சியை மணம் செய்து கொடுத்த குறவர் குலம் எங்கள் குலமாகும்.