உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

இளங்குமரனார் தமிழ்வளம் -38

-

(அ - ள்.) கச்சு மார்புக்கட்டு; பொருது - போரிட்டு; பணைத்த; பருத்த; மணி

-

-

அழகு; பயந்த பெற்ற; செச்சை வெட்சிமாலை. குஞ்சி குடுமி; தடங்கண் - அகன்ற கண்; கொச்சைச் சிறுமி - இளமழலை மொழிபேசும் சிறுமியாகிய வள்ளியம்மை;

இது குறி கூறுபவள் தன் குலப்பெருமை கூறியது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

18. கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்குகல்லி எடுப்போம் குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக் கொடியில்வைத்துத்

தொடுப்போம் பழம்பிழிந்த கொழும்சாறும் தேறலும்வாய் மடுப்போம் பசுந்தழையும் மரவுரியும் இசைந்திடவே உடுப்போம் செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தருந்தக் கொடுப்போம் சினவேங்கைப் புலித்தோலின் பாயலின்கண் படுப்போம் எழுந்துகயற் கணிகாலில் விழுந்துவினை கெடுப்போம் எங்கள்குறக் குடிக்கடுத்த இயல்பிதுகாண் அம்மே.

(தெ-ரை.) அம்மே, வளமான கொடியின் ஆழத்தில் இருக்கும் வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுப்போம்; குறிஞ்சிப் பூவைத் தேர்ந்தெடுத்து முல்லைக் கொடியை நாராகக் கொண்டு தொடுப்போம்; இனிய பழம் பிழிந்த வளமான சாற்றையும் தேனையும் பருகுவோம்; பசுந்தழையால் செய்யப்பட்ட ஆடை யையும் மரப்பட்டையால் ஆகிய ஆடையையும் விருப்பமுடன் உடுத்துவோம்; செம்மையாக விளைந்த தினைமாவுடன் இனிய தேனைக் கலந்து விருந்தினர் உண்ணுமாறு கொடுப்போம்; சினத்தால் தாக்கும் வேங்கைப் புலியின் தோல் ஆகிய படுக்கை யில் படுப்போம்; காலையில் எழுந்து அங்கயற்கண் அம்மையின் காலில் விழுந்து நாங்கள் செய்த பாவத்தை ஒழிப்போம்; இவை எங்கள் குறக்குடிக்குப் பொருந்திய இயல்புகளாம்.

(அ - ள்.) கல்லி - தோண்டி; தெரிந்து - ஆராய்ந்து; தேறல் - தேன்; வாய்மடுப்போம் -பருகுவோம்; விருந்து - விருந்தினர்; கணி - கண்ணி; வினை - தீவினை, பாவம்; அடுத்த பொருந்திய.

-

இது குறி கூறுபவள் தன் குடியியல்பு கூறியது.

இப் பாடலில் உள்ள இறுதி இயைபு நயம் இன்பூட்டும்.