உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

19. புல்வாயின் பார்வையைவெம் புலிப்பார்வை இணங்கும் புதுத்தினைகல் லூரற்பாறை முன்றில்தொறும் உணங்கும் கல்விடரில் வரிவேங்கை கடமானோ(டு) உறங்கும் கருமலையில் வெள்ளருவி கறங்கிவழிந்(து) இறங்கும் சில்வலையும் பல்வாரும் முன்இறப்பில் தூங்கும்

சிறுதுடியும் பெருமுரசும் திசைதொறும்நின் றேங்கும் கொல்லையின்மான் பிணையும்இளம் பிடியும்விளை யாடும் குறிச்சிஎங்கள் குறச்சாதி குடியிருப்ப(து) அம்மே

245

(தெ-ரை.) புல்லாய் என்னும் மானின் பார்வையை விரும்பத்தக்க புலியின் பார்வை இணங்கச் செய்யும்; புதிதாக விளைந்த தினை, இடித்தற்கு ஆகும் கல்லுரல் அமைந்த பாறையின் முகப்புகள் தோறும் காயும்; கற்குகைகளில் வரிகள் அமைந்த வேங்கைப் புலி காட்டுமானோடு சேர்ந்து உறங்கும்; கரிய மலையில் இருந்து வெண்ணிற அருவி ஒலியோடு ஒழுகி வீழும்; வலைகள் சிலவும், வார்கள் பலவும் குடிசையின் முன் வளையில் தூங்கும்; சிறிய துடிப்பறையும் பெரிய முரசும் திசை தோறும் தொடர்ந்து ஒலிக்கும்; குடிசையின் பின்புறத்தில் பெண்மானும் இளைய பெண் யானையும் கூடி விளையாடும்; இத்தகைய குறிச்சி எங்கள் குறவரினத்தார் குடியிருப்பிடமாகும்.

-

-

(அ - ள்.) புல்வாய் மானின் ஒருவகை; மூன்றில் முற்றம்; உணங்கும் -காயும்; விடர் - குகை; வரி - கோடு; கடமான்காட்டு மான்; கறங்கி ஒலித்து; சில் - சில; வார் - தோல்வார்; இறப்பு வளை; ஏங்கும் - ஒலிக்கும்; கொல்லை - வீட்டின் பின்புறம்; பிணை பெட்டை; பிடி - பெண்யானை; குறிச்சி -குறவர் குடியிருக்கும் ஊர்.

-

இது குறிசொல்பவள் தங்கள் குடியிருப்புப்பற்றிக் கூறியது. இதிலமைந்த முரண், நயம் செறிந்தது; இயைபும் இனிது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

20. வெள்ளிமலைக் குறவன்மகன் பழனிமலைக் குறவன்எங்கள் வீட்டில் கொண்ட

வள்ளிதனக் கேகுறவர் மலையாட்சி சீதனமா வழங்கி னாரால்