உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

பிள்ளைதனக் கெண்ணெயிலை அரைக்குமொரு துணியிலைஎன் பிறகே வந்த

கள்ளிதனைக் கொண்டஅன்றே குறவனுக்கும் எனக்கும்இலை கஞ்சி தானே.

(தெ-ரை.) வெள்ளிப் பனிமலையாகிய கயிலாயமலைத் தலைவன் சிவபெருமான் மகனாகிய பழனிமலைக்குரிய முருகன், எங்கள் குடும்பத்தில் மணம் செய்துகொண்ட வள்ளியம்மைக் காகக் குறவர்கள் மலையாட்சியைச் சீதனப் பொருளாக வழங்கினார்கள். அத்தகைய வளமான குறக்குடியில் பிறந்த என் பிள்ளைக்குத் தேய்க்க எண்ணெய் இல்லை; இடுப்பில் கட்டுதற்கு ஒரு துணியும் இல்லை; எனக்குப் பின்னே வந்த இளையவளான வஞ்சகியைக் கொண்டது முதலே என் கணவனாகிய

குறவனுக்கும் எனக்கும் குடிக்கக் கஞ்சி தானும் இல்லை.

(அ - ள்.) வெள்ளிமலை - கயிலாயம்; வெள்ளிமலைக் குறவன் - சிவன்; பழனிமலைக் குறவன் முருகன், குறவன் என்றது குறிஞ்சி(மலை) நில ஆட்சியுடைமை கருதியது. முருகன் குறவர் மகளை மணஞ்செய்து கொண்ட உரிமை கருதிச் சொல்லப் பட்டதுமாம். சீதனம் - பெண்ணுக்கு அவள் பிறந்த வீட்டார் தரும் பொருள். என் பிறகு வந்தவள் என்றது

இலை

லை - இல்லை.

ளையவளை.

இது தன் குடிப்பெருமையும் தன் குடும்ப நிலையுமாகக் குறத்தி கூறியது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

21. கூடல்புன வாயில்கொடுங் குன்றுபரங் குன்று குற்றாலம் ஆப்பனூர் பூவணம்நெல் வேலி ஏடகம்ஆ டானைதிருக் கானப்பேர் சுழியல்

இராமேசம் திருப்புத்தூர் இவைமுதலாம் தலங்கள் நாடியெங்கள் அங்கயற்கண் ஆண்டதமிழ்ப் பாண்டி நன்னாடும் பிறநாடும் என்நாட தாகக் காடுமலை யும்திரிந்து குறிசொல்லிக் காலம்

கழித்தேன்என் குறவனுக்கும் கஞ்சிவாரா தம்மே.

(தெ-ரை.) அம்மே, என் தலைவனாகிய குறவனுக்குக் கஞ்சி காய்ச்சித் தருதலை விடுத்து மதுரை, திருப்புனவாயில், திருக்கொடுங்குன்றம், திருப்பரங்குன்றம், திருக்குற்றாலம்,