உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

247

திருஆப்பனூர், திருப்பூவணம், திருநெல்வேலி, திருவேடகம், திருவாடானை,திருக்கானப்பேர், திருச்சுழியல், இராமேச்சுரம், திருப்புத்தூர் ஆகியவை முதலாகிய திருக்கோயில்களை விரும்பி எ;ங்கள் மீனாட்சியம்மை ஆட்சி புரிந்த இனிய பாண்டி நாட்டையும் சேரநாடு, சோழநாடு, தொண்டைநாடு முதலிய நாடுகளையும் என் நாடாக எண்ணிக் காடும் மலையும் அலைந்து குறிசொல்லிப் பொழுது போக்கினேன்.

(அ - ள்.) பாடு புகழ்பெற்ற பாண்டி நாட்டு பதினான்கு திருக்கோயில்களும் இதில் குறிக்கப்படுகின்றன. கொடுங்குன்று பிரான்மலை; தான் கணவனுக்குச் செய்யவேண்டிய கடமையை விடுத்து அலைந்ததாகத் தன் குறிசொல்லும் நாட்டத்தை வெளியிட்டாள். நாடி - விரும்பி யடைந்து; பாண்டி நன்னாடும் பிறநாடும் என் நாடதாக" என்பதில் "யாதானும் நாடாமால் ஊராமால்” என்னும் குறள்கருத்து எளிமையாக ஆளப் பட்டுள்ளது. கஞ்சி வாராது கஞ்சி ஊற்றாமல்.

-

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

22. பொற்றொடிவள் ளிக்கிளைய பூங்கொடிஎன் பாட்டி பூமகள்மா யவன்மார்பில் பொலிவளென்று சொன்னாள்; மற்றவள்பெண் களில்எங்கள் பெரியதாய் கலைமான் மலரயனார் திருநாவில் வாழ்வளென்று சொன்னாள்; பெற்றஎங்கள் நற்றாயும் சுந்தரிஇந் திரன்தோள் பெறும்என்றாள்; பின்எங்கள் சிறியதாய் அம்மே சொற்றகுறிக்(கு) அளவிலைஎம் கன்னிமார் அறியச்

சொன்னேன்பொய் அலநாங்கள் சொன்னதுசொன்

னதுவே.

(தெ-ரை.) அம்மே, பொன்வளையல் பூண்ட வள்ளிக்கு ளையவளாய்ப் பூங்கொடி போன்றவளாகிய என் பாட்டி, திருமகள் திருமால் மார்பில் விளங்குவாள் என்று குறி சொன்னாள்; பின் அப் பாட்டியின் பெண்களில் ஒருத்தியாகிய எங்கள் பெரியதாய் கலைமகள் தாமரைமலரில் வீற்றிருக்கும் நான்முகனார் திருநாவில் வாழ்வாள் என்று சொன்னாள்; எங்களைப் பெற்ற நல்ல தாயும், இந்திராணி இந்திரன் தோளைச் சேர்வாள் என்று சொன்னாள்; அதற்குப் பின்னர் எங்கள் சிறிய தாய் சொன்ன குறிக்கு அளவே இல்லை; இச் செய்திகளை