உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ்வளம்-38

நாங்கள் வழிபடும் தெய்வகன்னியர் அறிய மெய்யாகச் சொன்னேன்; பொய் கூறவில்லை; நாங்கள் சொல்லுவன எல்லாம்

மெய்யானவையே.

(அ-ள்.) தொடி - வளையல்; பூமகள் - திருமகள்; மாயவன் - திருமால்; கலைமான் கலைமகள்; மலர் அயன் - நான்முகன்; சொன்னது இந்திராணி; சொற்ற

சுந்தரி

-

-

-

சொன்ன;

சொன்னதுவே - சொல்லியவை மெய்யானவையே.

குறத்தி தன் முன்னோர் கூறிய குறி பொய்யாமையை எடுத்துரைத்தது இது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

23. முன்னொருநாள் அம்மைதடா தகைபிறந்த நாளின் முகக்குறிகண்(டு) இவளுலகம் முழுநாளும் என்றேன்; பின்னொருறாள் கைக்குறிபார்த்(து) அம்மையுனக்(கு) எங்கள் பிஞ்ஞகர்தாம் மணவாளப் பிள்ளையென்று சொன்னேன்; அன்னையவள் மெய்க்குறிகள் அனைத்தையும்பார்த்(து)

உரைத்தேன் ஆண்பிள்ளை உண்டுபிறந்(து) அரசாளும் என்றேன் சொன்னகுறி எல்லாம்என் சொற்படியே பலிக்கும்

தொகுத்துநீ நினைத்தகுறி இனிச்சொலக்கேள் அம்மே.

(தெ - ரை.) அம்மா, தடாதகைப் பிராட்டி பிறந்த பழைய நாளில் அவள் முகக்குறி கண்டு 'இவள் உலகம் முழுவதையும் ஆட்சி புரிவாள்' என்று குறி கூறினேன்.. அதற்குப் பின்னே ஒரு நாளில் அவள் கைக் குறிகளைக்கண்டு, "அம்மையே உனக்கு எங்கள் சிவபெருமானே மணவாளர்" என்று கூறினேன். அதற்குப் பின்னர் ஒருநாள், அவள் உடற்குறிகள் எல்லாவற்றையும் கண்டு, "அம்மா, உனக்கு ஆண் பிள்ளை பிறக்கும்; அப் பிள்ளை ஆட்சி செய்யும்" என்றேன். இவ்வாறு நான் சொன்ன குறிகள் எல்லாம் என் சொற்படியே பலித்தன. ஆதலால் உனக்குக் கூறும் குறியும் பலித்தல் உண்மை. நீ நினைத்த குறிகள் எல்லாவற்றையும் மொத்தமாக நான் கூறக் கேட்பாயாக.

(அ -ள்.) தடாதகை - இறைவி, மலயத்துவச பாண்டியன் மகளாகப் பிறந்து பெற்ற பெயர். பிஞ்ஞகர் -சிவபெருமான்; அவர் செளந்தர பாண்டியனாக வந்து தடாதகையை மணங் கொண்டார்; அவர் பிள்ளை உக்கிர குமார பாண்டியன்.