உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

இது குறத்தி தன் குறித்திறம் கூறியது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

24. ஒருகாலம் கஞ்சியும்என் குஞ்சுதலைக்(கு) எண்ணெயும்ஓர் உடுப்பும் ஈந்தால் பொருகால வேல்கண்ணாய் மனத்துநீ

நினைத்தஎலாம் புகல்வன் கண்டாய்

வருகாலம் நிகழ்காலம் கழிகாலம்

மூன்றும்ஒக்க வகுத்துப் பார்த்துத்

தருங்காலம் தெரிந்துரைப்ப(து) எளிதரிதன்(று) எங்கள்குறச் சாதிக்(கு) அம்மே.

249

(தெ-ரை.) அம்மே, தாக்குதற்கு வரும் காலன் போன்ற வேல் வடிவக் கண்ணுடையாய், ஒரு வேளைக்குக் கஞ்சியும் என் குழந்தை தலைக்கு எண்ணெயும் ஓர் உடையும் தந்தால் நீ மனத்தில் நினைத்தவற்றையெல்லாம் கூறுவேன்; எதிர்காலம் நிகழ்காலம் கடந்தகாலம் ஆகிய முக்காலங்களையும் செவ்வையாக ஆராய்ந்து பார்த்து நன்மைதருங் காலம் தேர்ந்து உரைப்பது எங்கள் குறச்சாதிக்கு எளிது; அரியது அன்று.

(அ - ள்.) ஒருகாலம் கஞ்சி -ஒரு வேளைக்கு ஆகும் கஞ்சி; குஞ்சு - குழந்தை; குழந்தையைக் குஞ்சு, குட்டி என்பன வழக்கு. பொரு - போரிடும். எலாம் எல்லாம்; குறத்தி, "முக்காலமும் அறிந்து குறி கூறும் முறைமை குறவர்க்கு எளிது அரிதன்று என்பதால் தங்களினப் பெருமை யுரைத்தாள்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

25. குங்குமம்சந் தனக்குழம்பிற் குழைத்துத்தரை மெழுகிக் கோலமிட்டுக் குங்குலியக் கொழும்புகையும் காட்டிச் செங்கனக நவமணிகள் திசைநான்கும் பரப்பித் தென்மேலை மூலைதனில் பிள்ளையார் வைத்துப் பொங்குநறு மலர்அறுகோட்டு) ஐங்கரர்க்குச் சாத்திப் புழுகுநெய்வார்த் திடுவிளக்கு நிறைநாழி வைத்து மங்கையருக்(கு) அரசிஎங்கள் அங்கயற்கண் அமுதை

மனத்துள்வைத்து நினைத்தகுறி இனிச்சொலக்கேள் அம்மே.

(தெரை அம்மே, செஞ்சாந்தைச் சந்தனக் குழம்புடன் குழைத்துத் தரையை மெழுகிக் கோலமிட்டுக் குங்குலியப்