உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

இளங்குமரனார் தமிழ்வளம்

-

38

பொடியைக் கனலில் இட்டு நறும்புகை காட்டிச் சிறந்த பொன் முதலான ஒன்பான் மணிகளை நான்கு திசைகளிலும் பரப்பித் தென்மேற்கு மூலையில் பிள்ளையார் வைத்து மணமிக்க நல்ல மலர்களை அருகம்புல்லுடன் அப் பிள்ளையார்க்குச் சாத்தி, புனுகும் நெய்யும் கலந்து விடப்பெற்ற விளக்கேற்றி, நிறைநாழி வைத்து மங்கையருக்கு அரசியாகிய எங்கள் மீனாட்சியம்மையை மனத்துக்கொண்டு நீ நினைத்த குறியை நான் இனிச் சொல்லக் கேட்பாயாக.

இது.

(அ -ள்.) கனகம் - பொன்; ஐங்கரர் - பிள்ளையார்; குறிக்களம் அமைப்பும் குறிகேட்பார் அமைதியும் கூறியது

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

26. முந்நாழி முச்சிறங்கை நெல்அளந்து கொடுவா; முறத்தில்ஒரு படிநெல்லை முன்னேவை அம்மே; இந்நாழி நெல்லையும்முக் கூறுசெய்தோர் கூற்றை இரட்டைபட எண்ணினபோ(து) ஒற்றைபட்ட தம்மே; உன்னாமுன் வேள்விமலைப் பிள்ளையார்வந்(து) உதித்தார்; உனக்கினியெண் ணினகருமம் இமைப்பினில் கைகூடும்; என்னாணை எங்கள்குலக் கன்னிமார் அறிய

எக்குறிதப் பினும்தப்பா(து) இக்குறிகாண் அம்மே.

(தெ-ரை.) அம்மே, மூன்றுநாழி மூன்றுகை நெல்லை அளந்து கொண்டுவா; சுளகில் ஒரு நாழி நெல்லைக் கொண்டு வந்து முன்னே வை; இந்த ஒரு நாழி நெல்லையும் மூன்று பங்கு வைத்து ஒரு பங்கு நெல்லை இரண்டு இரண்டாக எண்ணு. அவ்வாறு எண்ணியபோது ஒற்றைப்பட வந்தது. நினைக்கு முன்னர், வேள்விமலைப் பிள்ளையார் வந்து தோன்றினார். ஆதலால் உனக்கு இப்பொழுதே நீ நினைத்த செயல் நெடிப் பொழுதில் நிறைவேறும். என் தலைமேல் ஆணை; எங்கள் குலத்தார் வணங்கும் கன்னியர் அறிய எந்தக் குறி தவறினாலும் இந்தக் குறி தவறாது; அறிவாயாக.

(அ - ள்.) நாழி ஒரு முகத்தலளவை; சிறங்கை (சிறு அங்கை) சிறிய உள்ளங்கை அளவு; கொடு - கொண்டு; கூறு- பங்கு; உன்னாமுன் - நினையாத முன்னே; இமைப்பு - இமைப் பொழுது; காண் - அறிக.