உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

இதனால் குறிபார்க்கும் முறைமை அறியலாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

27. நெல்லளந் திட்ட போது

நிமித்தநன்(று) இடத்தெ ழுந்த

பல்லியும் வரத்தே சொல்லும்;

பத்தினிப் பெண்கள் வாயால்

251

சொல்லிய வாய்ச்சொல் அன்றித்

தும்மலும் நல்ல தேகாண்; அல்லது கிளைகூட் டும்புற்(று)

ஆந்தைவீச்(சு) அழகி(து) அம்மே.

(தெ-ரை.) அம்மா, நெல்லை அளந்து படைத்தபோது சொகினம் (சகுனம்) நன்று; இடப்பக்கத்தே எழுந்த பல்லி ஒலியும் நன்மை வருவதையே உரைக்கும்; பத்தினிப் பெண்கள் தங்கள் வாயால் சொல்லிய உரையே அன்றி அவர்கள் தும்மிய தும்மலும் நன்மைக்கு அறிகுறியேயாம்; இவற்றை அன்றித் தன் இனத்தை அழைக்கும் புற்றின்மேல் உள்ள ஆந்தையின் ஒலியும் நன்மையானதேயாம்.

(அ - ள்) நிமித்தம் -சொகினம்; இதனைச் சகுனம் என்பர். வாயால் சொல்லுதலை விரிச்சி என்பர்; அசரீரி என்பதும் அது. உடல் தோன்றாமல் ஒலிமட்டும் வெளிப்படுவது (அ + சரீரி). வீச்சு-ஒலி.

நல்ல குறிகள் இவையென நவில்கின்றது இது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

28. கொண்டுவா அம்மேகை கொண்டுவா அம்மே; கொழுங்கனக நவமணிகள் அளைந்திடும்உன் கையே; வண்டுசுலா மலர்கொய்ய வருந்திடும்உன் கையே; வருந்தினர்க்கு நவநிதியும் சொரிந்திடும்உன் கையே; புண்டரிகம் பூத்தழகு பொலிந்திடும்உன் கையே; புழுகுறுநெய்ச் சொக்கர்புயம் தழுவிடும்உன் கையே; அண்டர்தம்நா யகிஎங்கள் மதுரைநா யகியை

அங்கயற்கண் நாயகியைக் கும்பிடும்உன் கையே.

(தெ-ரை.) அம்மே, உன் கையைக் கொண்டு வருவாயாக; சிறந்த பொன் முதலிய ஒன்பான் மணிகளும் அள்ளிமகிழும்