உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

இளங்குமரனார் தமிழ்வளம் - 38 ⭑

உன்கை; வண்டுகள் மொய்த்துச் சுழலும் மலர் பறிக்கவும் வருந்தும் மென்மையினது உன்கை; வருந்தி வந்தவர்க்கு ஒன்பான் மணிகளும் அள்ளி மகழும் உன்கை; தாமரைபோல் மலர்ந்து அழகு விளங்கும் உன்கை; நறுமண நெய்யின் மணம் கமழும் சொக்கநாதர் தோளைத் தழுவி இன்புறும் உன்கை; தேவர்களுக்குத் தலைவியாகிய எங்கள் மதுரைத் தலைவியாம் மீனாட்சியம்மையைக் கும்பிடும் உன்கை..

(அ - ள்.) அளைதல் - அள்ளி எடுத்தல்; என்றது செல்வப் பெருக்கை உரைத்தது; வண்டு சுலா மலர் வண்டு சுழலும் (மொய்க்கும்) மலர்; வருந்தினர் - இல்லாமையால் வருந்தியவர்; புண்டரிகம் - தாமரை; புழுகு உறுநெய் - செஞ்சாந்து கலந்த நெய்; அண்டர்-தேவர்.

இது தலைவியின் கையருமை கூறியது.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

29. அம்மேநின் செங்கையைநின் கொங்கையில் வைத்ததுதான் அபிடேகக் சொக்கருனை அணைவரென்ற குறிகாண்; இம்மேலைத் திகையினிற்கை எடுத்ததுவும் அவர்தாம் இன்றந்திப் பொழுதினில்வந்து) எய்துவரென் றதுகாண்; கைம்மேல்கை கட்டியதும் தப்பாமல் உனக்குக் கைகூடும் நீநினைத்த காரியம்என் றதுகாண்; செம்மேனி மணிவயிற்றில் கைவைத்த(து) இனிநீ

சிறுவர்பதி னறுவரையும் பெறுவையென்ற தம்மே.

(தெ-ரை.) அம்மே, உன் சிவந்த கையை உன் மார்பில் வைத்தாய்; இது வழிபாட்டுக்குரிய சொக்கநாதர் உன்னை வந்து கூடுவார் என்பதை அறிவிக்கும் அடையாளம் என்பதை அறிவாயாக; இந்த மேற்குத் திசையில் நீ கையை எடுத்தாய் (தூக்கினாய்); இஃது அச் சொக்கநாதர் இன்று மாலைப் பொழுதில் உன்னிடம் வந்து சேர்வார் என்பதற்கு அடையாளம் என்பதை அறிவாயாக; உன் கையின்மேல் கையைக் கட்டிக் கொண்டது நீ நினைத்தது தப்பாமல் நிறைவேறும் என்பதற்குரிய அடையாளம் என்பதை அறிவாயாக; நின் சிவந்த திருவுடலின் அழகிய வயிற்றில் நீ கையை வைத்தது இனிச் சிறுவர் பதினாறுபேர் பெறுவாய் என்பதற்குரிய அடையாளமென அறிவாயாக.