உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

மீனாட்சியம்னை குறம்

253

(அ - ள்.) கொங்கை மார்பு; அபிடேகம் -வழிபாடு; திகை

-

திசை; அந்தி மாலை; மணி

-

அழகு; சிறுவர் பதினறுவர்

என்பது 'பதினாறுபேறு' என்பது மக்கள் பதினாறு பேரையும்

குறிக்கும் என்பதற்கு ஒரு சான்று.

இது தலைவியின் கைக்குறி கண்டு கூறிய குறி.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

30. அங்கைத் தலத்துத் தனரேகை

அளவில் செல்வம் தரும்உனது செங்கைத் துடிதென் மதுரேசர்

செம்பொற் புயத்தில் சேர்க்குமால்;

இங்கிப் படிபுத் திரரேகை

எவர்க்கும் இலைஇப் படிதோளில் தங்கும் மறுஅங் கயற்கணம்மை

தன்னோ டிருக்கத் தரும்அம்மே.

(தெ-ரை.) அம்மே, உன் அழகிய கையிடத்து அமைந்த செல்வரேகை அளவற்ற செல்வம் உண்டு என்பதைக் குறிக்கும். உனது சிவந்த கையின் துடிப்பு, அழகிய சொக்கநாதரின் சிவந்த பொன் போன்ற திருத் தோளில் சேர்வாய் என்பதைக் காட்டும்; உனக்கு இக் கையில் இருப்பது போலப் புதல்வரைக் காட்டும் வரிகள் எவர்க்கும் வாய்த்தன இல்லை; இவ்வாறு அழகாகத் தோளில் விளங்கும் மறு (மச்சம்) மீனாட்சியம்மையுடன் இருக்கும் பேற்றைத் தரும்.

-

(அ - ள்.) அங்கை (அம்+கை) அழகிய கை; அங்கை (அகம்+கை) உள்ளங்கை; தலம் - இடம்; தனரேகை, புத்திரரேகை

என்பன ரேகை வகைகள்; துடி

அம்மை தன்னோடு

குறித்தது.

-

துடிப்பு; இலை -இல்லை;

ருத்தல், இறைவரால் விரும்பப் படுதல்

இது ரேகையும் துடிப்பும் மறுவும் கொண்டு கூறிய குறி.

சிந்து

31. பொன்பொதியும் துகிலெனவெண்

புயலொடுதண் பனிமூடும்

தென்பொதிய மலையாட்டி

பேரைச்சொல்லாய் பாடநான்.