உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

இளங்குமரனார் தமிழ்வளம்

-

38

(தெ-ரை.) பொன்னை மூடிவைத்த வெண்பட்டாடை என்னுமாறு வெண்ணிற மேகத்துடன் தண்ணிய பனிமூடிக் கிடக்கும் அழகிய பொதிய மலையாளும் பெருமகளின் பேரைச் சொல்வாயாக நான் பாடுதற்கு.

(அ - ள்.) பொன் - (இவண்) வெண்பொன்னாம் வெள்ளி; வெண்புயல் என்பதை நோக்குக. துகில் - மெல்லிய ஆடை; நான்பாட, பேரைச் சொல்லாய்" என இயைக்க.

இது முதல் நூன்மூடிய மீனாட்சியம்மையின் புகழ் கூறுவது.

32. பலநதிகள் புணர்ந்தநதி

பதியைஅணை யாதவைகைக் குலநதித்தண் டுறைச்செல்வி

பேரைச்சொல்லாய் பாடநான்.

(தெ-ரை.) பல ஆறுகளும் கூடும் கடலை அடையாத வையையாம் ஆற்றையும், குளிர்ந்த நீர்த்துறைகளையும் உடைய செல்வியைப் பாடுதற்குப் பேரைச் சொல்வாயாக.

(அ - ள்.) புணர்ந்த - கூடிய; நதிபதி - கடல்; அணையாத அடையாத; குலநதி சிறந்தநதி

-

33. அன்பாண்டு கல்வலிதென்(று) அவ்வாபா டியஎங்கள் தென்பாண்டி நாட்டாள்தன்

பேரைச்சொல்லாய் பாடநான்.

(தெ-ரை.) அன்புமிகக் கொண்டு 'கல்வலிது' என்று ஒளவைப் பெருமாட்டியார் பாடிய பாடலைக் கொண்ட எங்கள் அழகிய பாண்டி நாட்டு அரசியின் பேரைச் சொல்வாயாக நான் பாடுவதற்கு

(அ - ள்.) அன்பாண்டு (அன்பு ஆண்டு) - அன்பு கொண்டு; வஞ்சி வெளிய" என்னும் தனிப் பாடலில், "பஞ்சவன் தன் நான்மாடக் கூடலில் கல்வலிது" என்று பாடப் பெற்றுள்ளது. தென் - அழகு; இனிமையுமாம்.

34. பொன்மாடம் சூழ்ந்தகரும் புயல்அமலன் போர்வைநிகர்

பன்மாடக் கூடலாள்

பேரைச்சொல்லாய் பாடநான்.