உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

255

(தெ-ரை.) பொன் மாடங்களைச் சூழ்ந்த கருமேகம், இறைவன் போர்த்திய யானையுரியாம் போர்வை போல விளங்கும் பன்மாடக் கூடலாம் மதுரை இறைவியின் பெயரைச் சொல்வாயாக நான் பாடுதற்கு.

(அ - ள்) புயல் - மேகம்; அமலன் - இறைவன்; நிகர்ஒப்பு; பன்மாடக் கூடல் - மதுரைக்கு ஒரு பெயர்.

35. எண்திசைக்கும் வேம்பாய்எம்

இறையவர்க்குக் கரும்பாகும் வண்டிசைக்கும் தாரினாள்

பேரைச்சொல்லாய் பாடநான்.

(தெ ரை.) எட்டுத் திசைகளிலும் உள்ளவர்க்கும் வேம்பாக இருந்து எம் இறைவராம் சிவபெருமானுக்குக் கரும்பாக இருக்கும், வண்டுகள் பாடும் மாலையணிந்த மீனாட்சியம்மையின் பேரைச் சொல்வாய் நான் பாடுதற்கு.

(அ - ள்.) வேம்பு - கசப்பு; கரும்பு - இனிப்பு; சுவைப் பொருள் சுவைத் தன்மையைக் குறித்து நின்றது. தார் - மாலை வேம்பு கரும்பு என்பன முரண்சுவை தருவன.

36. தினவட்டம் இடும்பருதித் திண்பரிமண் பரியாக்கும்

கனவட்ட வாம்பரியாள்

பேரைச்சொல்லாய் பாடநான்.

(தெ-ரை.) நாள்தோறும் வட்டமிடும் கதிரோனின் வலிய குதிரைகளை மண் குதிரைகள் என்னும்படி தூசி பரக்க விரைந்து செல்லும் கனவட்டம் என்னும் தாவும் குதிரையை உடைய பாண்டி மாதேவியின் பேரைச் சொல்வாயாக நான் பாடுதற்கு.

(அ -ள்.) பருதி -கதிரோன்; பரி - குதிரை; கனவட்டம் பாண்டியன் குதிரையின் பெயர். மண் தூசி படுதலால் மண் பரிகள் என்னும் படியாயின பகுதிப் பரிகள் என்க. இஃது உயர்வு நவிற்சியணி.

37. திக்கயங்கள் புறங்கொடுப்பத் திசையெட்டும் திறைகொண்ட கைக்கயத்தை மேற்கொண்டாள் பேரைச்சொல்லாய் பாடநான்.