உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

இளங்குமரனார் தமிழ்வளம் - 38 ஓ

(தெ-ரை.) திசை யானைகள் புறங்கொடுத்து ஓடுமாறு எட்டுத் திசைகளிலும் வெற்றிக் கொடி நாட்டிக் கப்பங்கொண்ட வலிய கையையுடைய யானையை மேலேறிச் செலுத்துபவள் ஆகிய மீனாட்சியின் பெயரைச் சொல்லாய் நான் பாடுதற்கு.

(அ - ள்) திக்கு +கயங்கள் - திக்கயங்கள் ; திசை யானைகள்; கைக்கயம் கையையுடைய யானை.

-

38. ஆன்ஏற்றுங் கொடியானை

ஐங்கணையான் வென்றிடஅம் மீன்ஏற்றின் கொடியுயர்த்தாள்

பேரைச்சொல்லாய் பாடநான்.

(தெ-ரை.) காளையைத் தன்னிடத்துக் கொண்ட கொடியினனாகிய சிவபெருமானை ஐந்து கணையுடைய மன்மதன் வெற்றி கொள்ள, அந்த மகரமீன் கொடியை உயர்த்தியவளாகிய மீனாட்சியின் பேரைச் சொல்வாயாக நான் பாடுதற்கு.

(அ - ள்.) ஆன் - இடபம் (காளை.) ஐங்கணையான் மன்மதன். அவன் கணைகள்; தாமரை,மா, அசோகு, முல்லை, குவளை என்பன. மீன் ஏறு - மகரமீன்.

39. இனிஆணை இலைஅரசர்க்(கு) என்றுதிசை எட்டுமொரு தனிஆணை செலுத்தினாள்

பேரைச்சொல்லாய் பாடநான்.

(தெ-ரை.) இனி மற்றை அரசர்க்கு ஆணையிடும் திறம் இல்லை என்று எட்டுத் திக்கிலும் ஒப்பற்ற தனி ஆணை செலுத்தியவளாகிய மீனாட்சியின் பேரைச் சொல்வாயாக நான் பாடுவதற்கு.

-

(அ -ள்) ஆணை -கட்டளை; ஒரு தனி ஆணை ஒப்பற்ற ஆணை. ஒரு தனி; ஒரு பொருட் பன்மொழி

40. கருமலையச் செருமலையும்

கைம்மலைய மன்னர்தொழ

வருமலையத் துவசன் அருள் மடக்கொடியைப் பாடுவனே.