உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

257

(தெ-ரை.) கருக்கலங்குமாறு போர் புரியும் யானைகளை யுடைய அரசர் வணங்குமாறு வரும் மலயத்துவச பாண்டியன் அருளிய மென்கொடி போன்றவளாகிய மீனாட்சியை யான் பாடுவேன்.

(அ - ள்.) கருமலைய -கருக்கலங்க; செரு மலையும் - போர் புரியும்; கைம்மலை யானை; மலையத்துவசன்

-

வேந்தன். மடக்கொடி - மெல்லிய கொடி.

41. விண்புரக்கும் கதிர்மௌலி

முடிகவித்து வெண்குடைக்கீழ்

மண்புரக்கும் அபிடேக

வல்லியைநான் பாடுவனே.

பாண்டிய

(தெ-ரை.) விண்ணை அளவும் ஒளியுடைய திருமுடியைச் சூடி வெண்கொற்றக் குடைக்கீழ் இருந்து மண்ணுலகை ஆட்சி புரியும் மீனாட்சியம்மையை நான் பாடுவேன்.

(அ - ள்.) புரக்கும் - காக்கும்; மெளலி - முடி; மெளலிமுடி என்றது ஒரு பொருள் பன்மொழி. அபிடேகம் - திருமுழுக்கு; ஈண்டும் பட்டாபிடேகம் கொண்ட அரசி என்பதைச் சுட்டியது.

42. வெம்புருவச் சிலைகுனிந்து

விழிக்கணைகள் இரண்டெந்தை மொய்ம்புருவத் தொடுத்தெய்த மொய்குழலைப் பாடுவனே.

(தெ-ரை.) விரும்பத் தக்க புருவமாகிய வில்லை வளைத்து விழியாகிய கணைகள் இரண்டை எம் தந்தையாம் சிவபெருமான் தோளை உருவிச் செல்லுமாறு தொடுத்து எய்த திரண்ட கூந்தலுடைய அம்மையைப் பாடுவேன்.

(அ - ள்.) வெம் - விருப்பம்; சிலை -வில்; எந்தை -எம் தந்தை; மொய்ம்பு-தோள்; மொய்குழல் திரண்ட குழல்; வண்டுகள் மொய்க்கும் குழல் என்றுமாம். குழல் -கூந்தல்.

43. ஊன்கொண்ட முடைத்தலையில் பலிகொண்டார்க்(கு) உலகேழும்

தான்கொண்ட அரசாட்சி தந்தாளைப் பாடுவனே.