உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

(தெ-ரை.) ஊன் ஒழுகும் நாற்றமுடைய தலை ஓட்டில் பிச்சை கொண்ட பெருமானாம் சிவபெருமானுக்கு, ஏழுலகும் தான் கொண்ட ஆட்சியைத் தந்த அம்மையைப் பாடுவேன். (அ - ள்.) முடை நாற்றம்; பலி - பிச்சை.

-

44. வானவர்கோன் முடிசிதறி

வடவரையில் கயல்எழுது மீனவர்கோன் தனைப்பயந்த

மெல்லியலைப் பாடுவனே.

(தெ-ரை.) தேவர் கோமானின் (இந்திரனின்) முடியைச் சிதறச் செய்து இமயமலையில் மீன் பொறியைப் பொறிக்கும் பாண்டியனாம் உக்கிர குமாரனைப் பெற்றெடுத்த தடாதகையாம் அம்மையைப் பாடுவேன்.

(அ - ள்.) வானவர்கோன் - இந்திரன்; வடவரை -வடக்கே உள்ள மலை; கயல் - மீன்; மீனவர்-பாண்டியர்; பயந்த - பெற்ற. 45. கான்மணக்கும் சடைக்காட்டில் கவின்மணக்கும் கடிக்கொன்றைத்

தேன்மணக்கும் பிறைநாறும்

சீறடியைப் பாடுவனே.

(தெ-ரை.) நறுமணம் கமழும் சடைத் தொகுதியில் அழகு விளங்கும் நறுமணக் கொன்றை மலரின் தேன் பரவும் திங்கள் பிறையின் மணம் விளங்கும் சிறிய அடியையுடைய பெருமாட்டி யைப் பாடுவேன்.

-

(அ - ள்.) கான் மணம்;காடு - தொகுதி; கவின் அழகு; கடிமணம்; சீறடி - சிறுஅடி. இஃது உமைகொண்ட ஊடலைத் தணிக்க இறைவர் வீழ்ந்து வணங்கியமையால் அவர் திருமுடி அம்மை திருவடியில் பட்டமை குறித்து மொழிந்தது.

46. எவ்விடத்தும் தாமாகி

இருந்தவருக்(கு) அருந்தவரும்

வெவ்விடத்தை அமுதாக்கும்

விரைக்கொடியைப் பாடுவனே.

(தெ-ரை.) எங்கும் தாமாக இருந்தவராம் சிவபெரு மானுக்கு அருந்துவதற்காக வந்த கொடிய நஞ்சை அமுதாக்கித் தந்த மணமிக்க பூங்கொடி போன்றவளாம் அம்மையைப் பாடுவேன்.