உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

259

(அ - ள்.) வெவ்விடம் - கொடிய நஞ்சு; விரை மணம்; இறைவன் நஞ்சுண்ட போது அது கண்டத்தளவில் நிற்க நிறுத்தியவள் அம்மை என்பது கொண்டு கூறியது. 'நஞ்சை அமுதாக்கும்' என்றது நயம்.

47. வைத்தபகி ரண்டமெனும்

மணற்சிற்றில் இழைத்திழைத்தோர் பித்தனுடன் விளையாடும்

பெய்வளையைப் பாடுவனே.

(தெ-ரை.) அடுக்கப்பட்ட அண்டங்களாகிய மணற்சிறு வீடுகளைக் கட்டிக் கட்டிப் பெருமானுடன் விளையாடும் பலவாகப் பெய்த வளையல் அணிந்த அம்மையைப் பாடுவேன்.

-

(அ - ள்.) பகிரண்டம் - பேரண்டம்; சிற்றில் - சிறுவீடு; இழைத்து கட்டி; பித்தன் சிவபெருமான். அண்டமும் பகிரண்டமும் படைத்தல் இறைவன் இறைவியர்க்குச் சிறுவீடு கட்டும் சிறுவிளையாட்டு என்றது இது.

48. இலைக்குறியும் குணமுநமக்(கு)

என்பார்க்கு வளைக்குறியும்

முலைக்குறியும் அணிந்திட்ட

மொய்குழலைப் பாடுவனே.

(தெ-ரை) வடிவும் குணமும் நமக்கு இல்லை என்பவராகிய இறைவர்க்கு வளையல் குறியும் மார்புக் குறியும் பதித்த திரண்ட கூந்தல் உடையவளைப் பாடுவேன்.

(அ - ள்.) இலை என்பதைக், 'குறி' 'குணம்' இரண்டற்கும் கூட்டுக. குறி - பெயருமாம்."ஓருருவம் ஒருநாமம் ஒன்றுமில்லார்" என்றது கருதுக. பதினொன்றாம் பாடலைப் பார்க்க.

49. ஒன்றாகி அனைத்துயிர்க்கும்

உயிராகி எப்பொருளும்

அன்றாகி அவையனைத்தும்

ஆனாளைப் பாடுவனே.

(தெ-ரை.) ஒரு பொருளாகியும், எல்லா உயிர்களுக்கும் உயிராகியும் எப்பொருளும் இல்லாததாகியும், எல்லாப் பொருளும் தானாகியும் நிற்கும் இறைவியைப் பாடுவேன்.