உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

(அ - ள்.) அனைத்தும் எல்லாம். அனைத்தும் ஆனாள்- எல்லாமாகியவள்; இறைமை இயல் உரைத்தது இது.

50. பரசிருக்கும் தமிழ்க்கூடல்

பழியஞ்சிச் சொக்கருடன்

அரசிருக்கும் அங்கயற்கண்

(தெ

ஆரமுதைப் பாடுவனே.

ரை ) புகழ் குடிகொண்ட தமிழ் மதுரையில் பழியஞ்சி என்னும் பெயர்கொண்ட சொக்கநாதருடன் இருந்து அரசு செலுத்தும் அங்கயற்கண்ணியாம் அரிய அமுதைப் பாடுவேன்.

(அ - ள்) பரசு புகழ்; கூடல் மதுரை; பழியஞ்சி என்றது இறைவர் பெயருள் ஒன்று. முன்னும் (5) கூறினார்.

வாழ்த்து

கொச்சகக் கலிப்பா

நீர்வாழி தென்மதுரை நின்மலனார் அருள்வாழி கார்வாழி அங்கயற்கண் கன்னிதிரு அருள்வாழி சீர்வாழி கச்சிநகர்த் திருமலைபூ பதிவாழி பேர்வாழி அவன் செல்வம் பெரிதூழி வாழியவே.

(தெ-ரை.) நீர் வாழ்க; அழகிய மதுரையில் கோயில் கொண்ட குறையிலா இறைவர் திருவருள் வாழ்க; மழை வாழ்க; அங்கயற்கண் அம்மையின் திருவருள் வாழ்க; சிறந்தவை எல்லாம் வாழ்க; காஞ்சி மாநகர் ஆட்சி புரியும் திருமலை பூபதி என்பான் வாழ்க; அவன் புகழ் வாழ்க; அவன் செல்வம் காலமெல்லாம் வாழ்வதாக.

(அ - ள்.) நின்மலர் - களங்கமில்லாத இறைவர்;கார் மேகம், மழை ;சீர் - சிறப்பு; கச்சி -காஞ்சி;திருமலை பூபதி - வள்ளல் பெயர்; பேர் - பெருமை ; ஊழி -நெடியதொரு கால

எல்லை.