உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை

நேரிசை வெண்பா

கார்பூத்த கண்டத்தெம் கண்ணுதலார்க்(கு) ஈரேழு பார்பூத்த பச்சைப் பசுங்கொம்பே - சீர்கொள் கடம்பவனர் தாயேநின் கண்ணருள்பெற் றாரே இடம்பவனத் தாயே இரார்.

(தெளிவுரை.) கரு நிறம் அமைந்த கழுத்தையுடைய எம்பெருமானும் சிவனார்க்குப் பதினான்கு உலகங்களையும் படைத்துத் தந்த பச்சைப் பசுங்கொடி போன்றவளே,

சிறப்பமைந்த கடம்பு மரம் நிறைந்த மதுரையில் எழுந்தருளிய அன்னையே, நின் திருவருள் பார்வை பெற்ற எவரே தம் இடம் விண்ணுலகமாக இரார். நின் திருவருள் நோக்கம் பெற்ற எவரும் விண்ணுலக இன்பம் பெறுவர் என்பதாம்.

-

(அருஞ்சொற்பொருள்.) கார் எருமை, கறை; கார்பூத்த கண்டம் - நீலகண்டம்; நுதல் - நெற்றி; பார் - உலகம்; கடம்பவனம் - மதுரை; இடம்பவனத் தாயே இரார் - இடம் பவனத்து ஆய் ஏ இரார் எனப் பிரித்துப் பொருள் கொள்க. பவனம் -விண்ணுலகம். இறைவன் திருவருட் சக்தியால் உலகைப் படைத்தான் ஆகலின் அச் சக்தியைப் 'பார்பூத்த பச்சைப் பசுங்கொம்பு' என்றார்.

கட்டளைக் கலித்துறை

2. இராநின் றதும்சொக்கர் எண்தோள் குழைய இருகுவட்டால் பொராநின் றதும்சில பூசலிட் டோடிப் புலவிநலம்

தராநின் றதுமம்மை அம்,மண வாளர் தயவுக்குள்ளாய் வராநின் றதுமென்று வாய்க்கும்என் நெஞ்ச மணவறையே. (தெ-ரை.) என் நெஞ்சாகிய மணவறைக்குள், அம்மை இறைவர் கண் பொத்துதலால் உலகெலாம் இருள் உண்டாகி நிலைபெற்றதும் பின்னர் இறைவரின் எட்டுத் தோள்களும்