உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

-

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

ஆம். கான் மணம்; பூ

அழகு, மென்மை, பூ; செய்ய மீன் செம்மையான மீன்; மீனாட்சி. "மீன் உலாவி விளையாடுவது வெள்ளி மன்றாடும் ஆனந்த மாக்கடல்”. விண்ணாறு வெள்ளியம்பலம்; மதுரைத்

வானகங்கை. வெள்ளிமன்று

-

திருக்கோயிலில் உள்ளது வெள்ளியம்பலம்; இஃது ஐந்து மன்றங்களில் ஒன்று. இப் பாடல் உருவகம்.

நேரிசை வெண்பா

7.

கடம்பவன வல்லிசெல்வக் கர்ப்பூர வல்லி

மடந்தை அபிடேக வல்லி - நெடுந்தகையை

ஆட்டுவிப்பாள் ஆடலிவட்(கு) ஆடல்வே றில்லையெமைப் பாட்டுவிப்ப தும்கேட் பதும்.

(தெ-ரை.) கடம்பவனக் கொடியும், வளமான கர்ப்பூரக் கொடியும் மங்கை நல்லாளும், திருமுழுக் காட்டப் பெறும் கொடியும் ஆகிய மீனாட்சியம்மை உயர்வற உயர்ந்த குணங் களால் அமைந்தவராகிய சிவபெருமானை ஆடல் ஆடுமாறு செய்வாள்; அன்றியும் எம்மைப் பாடச் செய்வதும் அதனைக் கேட்பதும் அல்லாமல் வேறு ஆடல்களைத் தானும் செய்யாள்.

-

(அ ள்.) கடம்பவனம் மதுரை; வல்லி - கொடி; அபிடேகம் - திருமுழுக்கு; நெடுந்தகை - சிவபெருமான்; “வல்லி நெடுந்தகையை ஆடல் ஆட்டுவிப்பாள்; எமை பாட்டுவிப்பதும் கேட்பதும் ஆடல்வேறு இவட்கு இல்லை" என இயைக்க.

கட்டளைக் கலித்துறை

8. பதுமத் திருவல்லி கர்ப்பூர வல்லிநின் பாதபத்ம

மதுமத் தொடும்தம் முடிவைத்த வாமது ரேசரவர்

இதுமத்தப் பித்துமன்(று) ஏழைமை முன்னர் இமையவர்கைப் புதுமத் தினைப்பொற் சிலையென் றெடுத்த புராந்தகர்க்கே.

(தெ-ரை.) தாமரைக் கொடி போன்றவளே, கர்ப்பூரக் கொடி போன்றவளே, நின் திருவடிகளாகிய தாமரை மலர்களை ஊமத்தையுடன் மதுரைப் பெருமான் தம் முடியில் சூடிக் கொண்டவாறு என்ன? இது மதிமயக்கம் கொண்டமையால் உண்டாகிய பித்தும் அன்று; முன்னாளில் தேவர்கள் கொண்டி ருந்த மலையாகி மத்தினை அழகிய வில்லாக எடுத்து முப்புரங் களை அழித்தவராகிய சிவனார்க்கு இஃது அறியாமையேயாம்.