உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

நேரிசை வெண்பா

5. கனமிருக்கும் கந்தரர்க்குன் கன்னிநா(டு) ஈந்தென்? தினமிரப்ப தோவொழியார் தேனே-பனவனுக்காப் பாமாறி யார்க்குனைப்போற் பாரத் தனமிருந்தால் தாமாறி யாடுவரோ தான்.

265

(தெ-ரை.) தேன் போன்ற இனிய அன்னையே, கறை யிருக்கும் கழுத்துடைய பெருமானுக்கு உன் பாண்டி நாட்டு உரிமையை ஈந்ததால் ஆயதென்ன? அவர் நாள்தோறும் பிச்சை யேற்றுத் திரிதலை விடார்; ஓர் அந்தணனுக்காகத் தம் பாடலை விற்றவராகிய இறைவருக்கு உன்னைப் போல் பெருஞ்செல்வம் (பெரிய கொங்கை) இருந்தால் கால்மாறி யாடியிருப்பாரோ? இரார். அவரிடம் பாரத்தனம் இல்லாமையால்தான் கால்மாறி ஆடிக் கொண்டு -கூத்தாடிக் கொண்டு இருக்கிறார் என்பதாம்.

-

(அ - ள்.) கனம் - மேகம்; இவண் கறை என்பதைக் குறித்தது. கன்னிநாடு பாண்டி நாடு. தினம் இரத்தல் - இறைவர் பலியேற்றுத் திரிதல். பனவன் - அந்தணன்; அவனாவான் தருமி; இதனைத் தருமிக்குப் பொற்கிழியளித்த திருவிளையாடல் விரியக் கூறும். இறைவன் மாறி யாடியதைக் 'கால்மாறியாடிய திருவிளையாடலால் அறியலாம். பாரத்தனம் - பெருஞ் செல்வம், பெரிய மார்பு. செல்வம் இல்லாதார் ஆடிப்பிழைப்பர் என்பது குறிப்பு.

கட்டளைக் கலித்துறை

6. தானின் றுலகம் தழையத் தழைந்த தமிழ்மதுரைக் கானின்ற பூங்குழல் கர்ப்பூர வல்லி கருங்கட்செய்ய மீனின் றுலாவி விளையா டுவதுவிண் ணாறலைய

வானின்ற தோர்வெள்ளி மன்றாடும் ஆனந்த மாக்கடலே.

(தெ-ரை.) தான் நிலைபெறுதலால் உலகம் செழிக்குமாறு செழித்த தமிழ் மதுரையின், மணம் நிலைத்த அழகிய கூந்தலை யுடைய மீனாட்சியம்மை என்னும் கரிய கண்ணையுடைய செய்ய மீன் நிலையாக உலாவி விளையாடுவது, வானகங்கை அலையுமாறு தெய்வத் தன்மை நிலைத்த வெள்ளியம்பலத்துத் திருக்கூத்தாடும் ஆனந்தப் பெருங்கடலிலேயாம்.

(அ - ள்.) தான் மதுரை; தமிழுமாம்; உலகம் தழையத் தழைத்தமை தமிழுக்கும் மதுரைக்கும் தனித்தனி இயைப்பினும்