உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

இளங்குமரனார் தமிழ்வளம் -38

"படிமிசை நடந்து பாடிப் பாணன்தன் விறகாள் ஆகி ஆ அடிமையென் றடிமை கொண்ட அருள்திறம்" என்பது விறகு விற்ற படலத் தொடக்கம்.

அம்மையின் காதல்திறம் கூறுவார் வஞ்சப்புகழ்ச்சியாய் 'கொடியார்க் கிலைகொல் குணம்' என்றார். இது இரட்டுறலால் கொடிபோன்றவர் என்றும் கொடியவர் என்றும் பொருள் தந்தது. கொடிக்கும் இலைக்கும் உள்ள தொடர்பு, சொல்நயம், இனிக் 'கொடியார்க்கு இலை கொல் குணம்' என உண்மை யுரைத்தமை உயர்நயம் உடையதாம். கொடியார்க்குக் கொல்லும் குணம் இல்லை என்பதாம்.

4.

கட்டளைக் கலித்துறை

குணங்கொண்டு நின்னைக் குறையிரந்(து) ஆகம் குழையப்புல்லி

மணங்கொண் டவரொரு வாமங்கொண்

டாய்மது ரேசரவர்

பணங்கொண் டிருப்ப தறிந்துகொள்

ளாயம்மை பைந்தொடியார் கணங்கொண் டிறைஞ்சும் நினக்குமுண் டாற்பொற் கனதனமே.

(தெ

-

ரை.) அம்மையே. காதற்பெருக்குக் கொண்டு நின்னைப் பணிந்து வேண்டி நின் உடல் தளிர்க்குமாறு தழுவி இன்புற்ற இறைவரது ஒரு பாகத்தைப் பற்றிக் கொண்டாய்; அவ் இறைவர் பணத்தைக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளாய்; பசுமையான வளையல் அணிந்த தெய்வமகளிர் கூட்டம் வணங்கி வழிபடத் தக்க நினக்கும் பொன் முதலிய பெருமைக்குரிய செல்வங்கள் உண்டாம்.

(அ - ள்.) நின்னிடம் கனதனம் இருப்பதால் இறைவன் பணங் கொண்டிருப்பது அறிந்து கொள்ளாய், என உலகியல் பொருள் வெளிப்படக் கூறினார். ஆனால் இறைவர் பணம் (பாம்பு) அணிந்திருப்பதும், அம்மை கனதனம் (கனத்த மார்பு) கொண்டிருப்பதும் உட்பொருள்களாம்.

-

ஆகம் - உடல், மார்பு; புல்லி - தழுவி; மணங்கொண்டவர் - பாகம்; பணம் - பாம்பு, செல்வம்; தொடி இறைவர்; வாமம் வளையல்; கணம் கூட்டம்; கனதனம் பெருஞ்செல்வம்.

கனத்த மார்பு,

-