உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

இளங்குமரனார் தமிழ்வளம் -38 ஓ

(தெ-ரை.) உள்ளங் கவர் கள்வராம் சொக்கரின் காதல் நெஞ்சை உருக்கும் பெரும் கள்வியும் கர்ப்பூரவல்லியும் ஆகிய மீனாட்சியம்மைக்கு முழங்கிச் செல்லும் நதி

வயை;

விருப்பமிக்க பொய்கை, பொற்றாமரைக் குளம்; மிகக் குளிர்ந்த தமிழை வரையறுத்துக் காட்டும் கலை அழகிய பொதியமலை; பர ஊழிகளில் கலை நலங்களெல்லாம் ஒழுங்காகப் பொருந்த அமைக்கப் பெற்ற அழகிய கோயில் திருவாலவாயும் என் நெஞ்சமுமேயாம்.

-

-

(அ - ள்.) இரைக்கும் - முழங்கும்; ஈர்ந்தண் தமிழ் மிகக் குளிர்ந்த தமிழ்; வரை - எல்லை; கனம் பெரிய; நிரைக்கும் - ஒழுங்குறச் செய்யப் பெறும்; கற்பகத்தார் என்பது பாடமாயின் தேவர்கள் என்பது பொருள். திருவாலவாய் - மதுரைக் கோயிலின் பெயர். பாம்பின் வாயால் எல்லை காணப் பெற்ற இடம் என்னும் காரணப் பொருட்டால் இப் பெயர் பெற்றது என்பது திருவிளையாடற் புராணம் 'திருவாலவாயான படலத்து'க் கண்ட செய்தி. நதி, மலை முதலிய பத்துறுப்புகளுள் (தசாங்கங்களுள்) சில கூறியது இது.

நேரிசை வெண்பா

11. நெஞ்சே திருக்கோயில் நீலுண் டிருண்டகுழல் மஞ்சேந்(து) அபிடேக வல்லிக்கு - விஞ்சி வருமந் தகாஎன் வழிவருதி யாலிக்

கருமந் தகாஎன் கருத்து.

(தெ-ரை.) நிலம் (கருமை) என்னும் நிறத்தை உண்டு இருளையே கவர்ந்து கொண்ட கூந்தலாகிய கருமேகத்தை ஏந்திய மீனாட்சி யம்மைக்கு, என் நெஞ்சமே திருக்கோயிலாகும்; அவ்வாறாகவும் எல்லை கடந்து வரும் கூற்றுவனே என் வழியின் படியே நீயும் வருவாயாக; நீ செய்யும் வன்மச் செயல் தகாது; உன் எண்ணம் தான் எதுவோ? கூறுவாயாக.

(அ - ள்.) நெஞ்சம் திருக்கோயிலாதலை முன்னரும் (9, 10) கூறினார். மேலும் (15, 17,20) கூறுவார். நீல் -நீலம் என்பதன் தொகுத்தல்; மஞ்சு - மேகம்; விஞ்சி - (எல்லை) கடந்து; அந்தகன் - இயமன்; இக்கருமம் - நீ எல்லை கடந்து வரும் செயல்; தகா பொருந்தா; என் - என்ன; அந்தகன் மார்க்கண்டன் மேல் வந்து இறைவன் சீற்றத்திற்கு ஆளாகி அல்லலுற்ற கதையைக் கருதுக. இஃதவன்மேல் கொண்ட அருளால் உரைத்ததென்க.

  • கற்பகத்தார் (பாடவேறுபாடு)