உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம் கட்டளைக் கலித்துறை

269

12. கருவால வாய்நொந்(து) அறமெலிந் தேற்கிரு *கால்மலரைந் தருவால வாய்நின்ற(து) ஒன்றுத வாய்வன் தடக்கைக்குநேர் பொருவால வாய்எட்டுப் போர்க்களி றேந்துபொற் கோயில்கொண்ட திருவால வாய்மருந் தேதென்னர்

கோன்பெற்ற தெள்ளமுதே.

(தெ-ரை.) கரிய பெரிய கையிற்கு ஒப்பாகப் பின்னே தொங்கும் வாலையுடையனவாகிய எட்டு வலிய யானைகளால் தாங்கப் பெறும் அழகிய இந்திர விமானத்தைக் கொண்ட திருவாலவாய்த் திருக்கோயிலில் உறையும் அரிய மருந்தே, பாண்டியன் பெற்ற தெளிந்த அமிழ்தமே, அளவிலா ஆசைகளுக்கு ஆட்படுதலால் பல்வேறு பிறவிகளுக்கு ஆளாகி நொந்து மிக வருந்தும் எனக்குத் திருவடிகளாகிய இரு மலர்களையுடைய ரு ஐந்தருவாகி ஆலமரத்தினிடத்தே நின்ற ஒப்பற்ற பொருளாகிய சிவத்தை அடைந்து இன்புற உதவுவாயாக.

-

(அ - ள்.) 'கருவாலவாய்' - அவாய் கருவால் என மாறி இயைக்க. அற மிக. மெலிந்தேற்கு மெலிந்த எனக்கு; மெலிவு - துன்பம்; ஐந்தரு வாலவாய்-ஐந்தரு ஆலவாய்; தடக்கை - பெரிய கை; நேர்பொரு ஒப்பாகிய; வாலவாய் - வாலையுடையனவாய்; எட்டுப்போர்க் களிறு ஏந்து பொற்கோயில் என்றது இந்திர விமானத்தை; அவ்விமானம் எண் திக்கு யானைகள் ஏந்தி நிற்குமாப் போன்ற அமைப்புடைமை குறித்தது. தென்னர் கோன் - பாண்டியன்; தெள் அமுது தெளிந்த அமுது. (மீனாட்சி) தடாதகைப் பிராட்டியாகப் பிறந்தாள் என்பது திருவிளை யாடல் புராணம்.

-

நேரிசை வெண்பா

13. தென்மலையும் கன்னித் திருநாடும் வெள்ளிமலைப் பொன்மலைக்கே தந்த பொலங்கொம்பே - நின்மா முலைக்குவடு பாய்சுவடு முன்காய மால்அம்

மலைக்குவடு அன்றே மணம்.

  • கால்மலரைத் (பாடவேறுபாடு