உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

(தெ

-

இளங்குமரனார் தமிழ்வளம் -38

ரை.) வெள்ளிப் பனிமலைமேல் வீற்றிருக்கும் பொன்மலை போன்றவராகிய சிவபெருமானுக்குப் பொதிய மலையையும், பாண்டித் திருநாட்டையும் உரிமையாய் வழங்கிய பொற்பூங்கொடி போன்ற அம்மையே, நின் பெரிய மார்புகளாகிய மலைகள் அழுந்தலால் பெருமான் மார்பில் காயம் உண்டாயிற்று. ஆனால் அழகிய நின் மார்பாகிய மலைக்குத் தழும்பு உண்டாக வில்லை; திருமணமே கைக்கூடிற்றாம்.

(அ - ள்.) தென்மலை -பொதியமலை; கன்னித் திருநாடு - பாண்டி நாடு; வெள்ளிமலை கயிலாயம்; பொன்மலை (செம்பொன் நிறமுடையவராகிய சிவபெருமான்); பொலம்- அழகு, பொன்; குவடு - மலை; சுவடு -தடம் ; வடு - தழும்பு. முலைக்குவடு பாய்சுவடு..மணம்" என்பது காஞ்சிப் புராணம் குழைந்த படலத்தில் விரித்துக் கூறப்பெறும் செய்தியாகும். இதனை முன்னரும் (2) குறித்தார்.

கட்டளைக் கலித்துறை

14. மணியே ஒருபச்சை மாணிக்க மேமருந் தேயென்றுன்னைப் பணியேன் பணிந்தவர் பாலுஞ்செல் லேனவர் பாற்செலவும் துணியேன் துணிந்ததை என்னுரைக் கேன்மது ரைத்திருநாட் டணியே அனைத்துயிர்க் கும்அனை நீஎன் றறிந்துகொண்டே.

(தெ ரை.) மதுரைத் திருநாட்டின் அணிகலமாக அமைந்தவளே, எல்லா உயிர்களுக்கும் அன்னையாவாய் நீயே என்பதை யான் அறிந்திருந்தும், உன்னைக் கருமணியே என்றும் ஒப்பற்ற பசுமையான மாணிக்கமே என்றும் அரிய அமிழ்தமே என்றும் பாடிப் பணியேன்; நின்னைப் பணிகின்ற பழவடியார் திருக்கூட்டத்தும் செல்லேன்; அவ்விடத்துச் செல்லுதற்கும் நினைவு கொள்ளேன்; யான் நினைத்த தீயவற்றை எல்லாம் எவ்வாறு சொல்லவல்லேன்.

(அ - ள்.) மணி - கண்மணி, கருமணி; மருந்து அமிழ்து; பிறவிப் பிணிக்கு மருந்து போன்றவளுமாம்; என் உரைக்கேன் என்ன சொல்வேன்; அனை - அன்னை; "அனை நீ என்று அறிந்து கொண்டும் பணியேன்; செல்லேன்; துணியேன்; என்னுரைக் கேள் - என முடிக்க.

-