உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

நேரிசை வெண்பா

15. கொண்டைச் செருக்கும் குருநகையும் நெட்டயிற்கண் கெண்டைப் பிறக்கமும் வாய்க்கிஞ்சுகமும் - கொண்டம்மை கற்பூர வல்லி கருத்திற் புகப் புகுந்தாள்

நற்பூர வல்லியுமென் நா.

(தெ

-

271

ரை.) திருக்கூந்தல் பெருமிதமும், ஒளிமிக்க புன்முறுவலும், நெடிய வேல் போன்றதும் கெண்டைமீன் போன்றதுமாகிய கண்ணின் ஒளியும், வாயாகிய முள் முருங்கை மலரும் கொண்டவளாகிய மீனாட்சியம்மை என் உள்ளத்தில் புகுந்த அளவில், நலமிக்க பூரவல்லி என்னும் பெயருடைய கலைமகளும் என் நாவில் புகுந்தாள்.

(அ - ள்.) செருக்கு பெருமிதம்; குருநகை

ஒளியுடைய பல்; இவண், நகை புன்முறுவலிப்பைக் குறித்தது; அயில் - வேல்; பிறக்கம் -ஒளி; கிஞ்சுகம் - முள்முருங்கை; அம்மைபுக, பூரவல்லி யும் என்நா புகுந்தாள் என இயைக்க. இறைவியின் திருவருளால் கல்வியும் நிரம்பும் என்பது கருத்தாம்; கொண்ட அம்மை என்பது 'கொண்டம்மை' எனத் தொக்கு நின்றது.

கட்டளைக் கலித்துறை

16. நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமழ் உண்டு நயந்தசில பாவுண் டினங்கள் பலவுமுண் டேபங்கிற் கொண்டிருந்தோர் தேவுண் டுவக்கும் கடம்பா டவிப்பசுந் தேனின் பைந்தாள்

பூவுண்டு நாரொன் றிலையாம் தொடுத்துப் புனைவதற்கே.

(தெ-ரை.) எமக்கு நாவுண்டு; நல்ல நெஞ்சும் உண்டு; நயமிக்க தமிழும் உண்டு; விருப்பமிக்க சில பாவகைகளும் உண்டு; பாவினங்கள் பலவும் உண்டு; தன் உடலில் பங்கு தந்து இருக்கும் தெய்வத்துடன் மகிழ்ந்திருக்கும் கடம்பவனத்து வளமிக்க தேனாகிய மீனாட்சியம்மையின் தண்மையான திருவடிகளாகிய தாமரைப் பூக்களும் உண்டு; ஆனால், அம் மலர்களைத் தொடுத்துச் சூடுதற்குரியதாம் அன்பு எனப்பெறும் நார் ஒன்று மட்டும் எம்மிடம் இல்லையாம்.

(அ - ள்.) பா பாட்டு; அவை வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன. இனி, இசைத்தமிழ்ப் பாக்களுமாம். இனங்கள் - பா வினங்கள்; அவை தாழிசை, துறை, விருத்தம் என்பனவும் கண்ணிகளும், சிந்துகளும் பிறவுமாம். பங்கிற்