உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

இளங்குமரனார் தமிழ்வளம் - 38

கொண்டு இருந்ததே உமை ஒரு பாகராம் சிவபெருமான்; கடம்பாடவி - கடம்பவனம்; பசுந்தேன் - மீனாட்சியம்மை ; நார் - அன்புக்கும் தொடுக்கும் நாருக்கும் இரட்டுறல். "புனைய நார் இலையாம்" என இயைக்க.

நேரிசை வெண்பா

17. புனைந்தாள் கடம்பவனப் பூவைசில பாவை வனைந்தாளெம் வாயும் மனமும் - தினம்தினமும் பொற்பதமே நாறுமவள்* பூம்பதமன் றேநமது சொற்பதமே நாறும் சுவை.

(தெ-ரை.) கடம்பவனத் துறையும் அம்மை, யாம் பாடிய சிலவகைப் பாக்களைப் பரிவுடன் ஏற்றுப் புனைந்தருளினாள்; எம் வாயையும் மனத்தையும் இடமாகக் கொண்டு அழகு செய்தாள்; நாள்தோறும் அவள் திருவடித் தாமரைகள் பொன்னுலக இன்ப மணத்தையே பரப்புவனவாம்; அவளைப் பாடி மகிழும் நம் சொல்லாகிய பதங்களே நறுஞ்சுவை பரப்புவனவாம்.

-

பெண்;

(அ - ள்.) புனைந்தாள் -சூடினாள்; பூவை - நாகணவாய்ப் பறவை போன்றவளுமாம்; வனைந்தாள் அழகு செய்தாள்; தினம் தினம் நாள்தோறும்; பொற்பதம் பொன்னுலக இன்பம்; நாறும் - மணக்கும்; பூம்பதம் - பூப்போன்ற திருவடி; அன்று, ஏ; அசைநிலைகள்; சொற்பதம்- சொல்லாகிய பதம்; இஃது ஒரு பொருள் பன்மொழி. பூவையைப் பாடுதலால் தம் பாவை மணமிக்கதாகக் குறித்தார்.

கட்டளைக் கலித்துறை

18. சுவையுண் டெனக்கொண்டு சூடுதி

யால்மற்றென் சொற்றமிழ்க்கோர்

நவையுண் டெனவற நாணுதி

போலு நகைத் தெயின்மூன்(று}

அவையுண் டவடொரருட்கூடல் வைகுமம்

மேசொற் பொருட்கு

எவையுண்டு குற்ற மவையுண்டு

நீவிர் இருவிர்க்குமே.

  • பூம்பத மென்றே (பாடவேறுபாடு