உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சியம்னை குறம்

273

(தெ-ரை.) நகைத்தலால் முப்புரங்களை எரித்து அழித்த வராகிய முக்கட் பெருமானின் ஒப்பற்ற திருவருள் வாய்ந்த மதுரை மாநகரில் கோயில் கொண்டுள்ள அம்மையே, யான் பாடும் தமிழ்ப்பாவில் ஒரு குற்றமுண்டெனக் கொண்டு ஏற்பதற்கு நாணுகின்றனை போலும்; சொல்லுக்கும் பொருளுக்கும் குற்றங்கள் எவை உண்டு; உண்டாயின், அச்சொல்லும் பொருளும் வடிவாக இருக்கும் உங்கள் இருவரையும் சேர்ந்த குற்றங்களாம் அல்லவோ? ஆதலால் என் பாடலைச் சுவை உண்டெனக் கொண்டு ஏற்றுக் கொள்வாயாக.

-

(அ - ள்.) சூடுதியால் (ஆல்) - அசைநிலை. நவை குற்றம்; அற மிக; எயில் - மதில்; எயில் மூன்று - முப்புரம். உண்டவர்- அழித்தவர் (சிவனார்) 'வைகும் அம்மே' நீவிர் இருவிர் என்றது உமையையும் சிவனாரையும். உமையம்மையும் சிவபெருமானும் முறையே சொல்லின் வடிவாகவும், பொருளின் வடிவாகவும் இருத்தலின் "குற்றமவை யுண்டு நீவிர் இருவிர்க்குமே" என்றார். அம்மையப்பர் சொற்பொருள் வடிவாக இருத்தல் திருவிளை யாடல் இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலத்தால் அறியப்பெறும் செய்தியாம்.

நேரிசை வெண்பா

19. விண்டிருந்த பொற்கமல மீதிருந்த பொன்னினையும் கொண்டிருந்து குற்றேவல் கொள்ளுமால் - தொண்டரண்டர் தேங்காவில் வீற்றிருப்பத் தென்மதுரைக் கேகடப்பம் பூங்காவில் வீற்றிருந்த பொன்.

(தெ-ரை.) அடியார்கள் தேவர்களின் இனிய பூங்காவில் அமர்ந்து நீங்கா இன்பத்தில் நிலைத்திருக்க, அழகிய மதுரைக் கண் அமர்ந்த கடப்பஞ் சோலையில் திருக்கோயில் கொண்டி ருக்கும் பொன்னாகிய மீனாட்சியம்மை, மலர்ந்து விரிந்த அழகிய செந்தாமரைப் பூவின்மேல் வீற்றிருக்கும் பொன் ஆகிய திருமகளையும் சிற்றேவல் கொண்டு விளங்குவாள்.

(அ

-

-

ள்.) விண்டு -மலர்ந்து; பொற்கமலம் அழகிய தாமரை; இது செந்தாமரை; பொன் - இலக்குமியாம் திருமகள்; குற்றேவல் - சிறுசிறு வேலைகள்; தேங் கா - இனிய சோலை; தென்மதுரைப் பொன், பொற்கமலப் பொன்னையும் குற்றேவல் கொள்ளும் என இயைக்க. பொற்கமலப் பொன்னினையும் குற்றேவல் கொள்ளும் என்றமையால் மற்றை மாதரைக் குற்றேவல் கொள்ளுதல் சொல்லாமலே அமைந்தது.