உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

இளங்குமரனார் தமிழ்வளம் -38

கட்டளைக் கலித்துறை

20. பொற்பூர வல்லி கமலத்த ளேகொல் புகுந்தகமும் வெற்பூர வல்லி பிறந்தக மும்மது மீட்டுமென்னே அற்பூர வல்லியென் வன்னெஞ்சக் கஞ்சத்தெம் ஐயனொடும் கற்பூர வல்லி குடிபுகுந் தேநின்ற காரணமே.

(தெ-ரை.) கற்பூரவல்லியாம் மீனாட்சியம்மை புகுந்த டம் அடியார் உள்ளமாகிய தாமரையே யாம்; மலையரசன் பெற்ற மகளாகிய அவள் பிறந்த இடமும், மலைச்சுனைக்கண் அமைந்த ஒரு தாமரையேயாம்; அன்புப் பெருக்குடைய கொடியாகிய அவ்வன்னை என் வலிய நெஞ்சத் தாமரையின் கண் எம்பெருமானுடன் மீண்டும் குடிபுகுந்திருக்கும் காரணம் தான் என்னையோ? இவள் வெண்டாமரையில் விளங்கும் அழகிய கலைமகளே போலும்; அன்றிச் செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளே போலும்!

·

-

அழகு; பூரவல்லி

-

(அ ள்.) பொன் கலைமகள்; கமலத்தள் - திருமகள்; கொல் என்பதைப் பூரவல்லி, கமலத்தள் என்னும் ஈரிடத்தும் கூட்டுக; புகுந்த அகம் -புகுந்த மனை; வெற்பு ஊர் அ வல்லி மலையில் பிறந்த அந்தக் கொடிபோன்றவள்; அது - அத் தாமரை; அற்பு -அன்பு; கஞ்சம் தாமரை, ஐயன் றைவனாம் சிவன்; "மீட்டும் குடிபுகுந்தே நின்ற காரணம் என்னே" என இயைக்க.

முதலீறு (அந்தாதி)த் தொடையால் அமைந்த இந் நூல் 'கார்' எனத் தொடங்கி 'காரணமே' என மண்டலித்து (சுழற்சி யுற்று) முடிந்தது.