உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம்

-

38

பெறுதி நீ முன்னிய வினை; அவன் குன்றமர்ந்துறைதலும் உரியன்; அதாஅன்று, அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு ; அதா அன்று, குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பு; அதா அன்று, விழவின் கண்ணும் நிலையின் கண்ணும் கந்துடை நிலையினும் களன் காடு முதலியவற்றினும் உறைதலும் உரியன்;

து யான் அறிந்தபடியே கூறினேன்; யான் கூறிய இடங் களினாதல் வேறிடங்களினாதல் அவனை முந்து நீ கண்டுழி ஏத்திப் பரவி வணங்கி யானறி அளவையின் ஏத்தி நின்னடி உள்ளி வந்தேன் என்று நீ குறித்தது மொழியா அளவை, கூளியர் தோன்றிப் பெரும அளியன் இரவலன் ஏத்தி வந்தோன் எனக்கூற அவனும் தானே வந்தெய்தி தழீஇக் காட்டி அஞ்சலோம்பென்று நன்மொழி அளைஇ ஒருநீயாகித் தோன்றும்படி பரிசில் நல்கும்; அவன்யாவன் எனில் பழமுதிர்சோலை மலைகிழவோன்'

வேலும் மயிலும் துணை.