உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற 310. மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம் பெருங்கடல் விடரளைச் செறியக் கருங்கோட்டு

315 ஆமா நல்லேறு சிலைப்பச் சேண்நின்று இழுமென இழிதரும் அருவிப்

பழமுதிர் சோலை மலைகிழ வோனே.

-

31

(கு - ரை) 296. துகில் ஆடை, இவண் கொடியைக் குறித்தது; நுடங்கி அசைந்து; 297. ஆரம் - சந்தனம்; முழுமுதல்- அடிமரம்; வேரல் -மூங்கில்; 298. அலங்குசினை -அசையும் கிளை; புலம்ப தனிமையாக; கீண்டு -கிழித்து; 299. பரிதி கதிரோன்; 300. அலர் இறால் - விரிந்த தேன்கூடு; 301. ஆசினி - ஈரப்பலா ; கலாவ - கலக்க; மீமிசை உச்சி; 302. நாகம் சுரபுன்னை; ஊகம் - கருங்குரங்கு; 303. மாமுக முசுக்கலை - கரிய முகத்தையுடைய முசுக்குரங்கு; பனிப்ப - நடுங்க; நுதல் - நெற்றி; 304. இரும்பிடி கரிய பெண்யானை; 305.வான்கோடு வெண்தந்தம்; 306. கொழியா -கொழித்து, வீசி; 307. துமிய - துணிய ; தாழை - தென்னை; 308. விழுக்குலை - சிறந்த குலை; 309. கறிக்கொடி, மிளகுக்கொடி; கருந்துணர் - கருநிறப்பூங்கொத்து; பொறி - புள்ளி - தோகை 310. மஞ்ஞை - மயில்; வெரீஇ - அஞ்சி; 311. வயப்பெடை - வலிய பெட்டை; இரிய - அகன்றுஓட; கேழல் காட்டுப் பன்றி; 312. இரும்பனை - கரியபனை; வெளிறு -சோறு; புன்சாய் -புல்லிய செதும்பு; 313. குரூஉ - நிறம்; குடாவடி வளைந்த அடி; உளியம் - கரடி; 314. விடர் அளை வெடிப்பில் அமைந்த குகை; 315. ஆமா -காட்டுப்பசு; ஏறு -ஆண்; சிலைப்ப ஒலிக்க; 317. பழமுதிர் சோலை பழம் உதிர் சோலை; பழமுதிர் சோலை; மலைகிழவோன் - மலைக்கு உரிமையாளன் ; முருகன்.

64

-

முடிபு

(உ டை) கணவன் மார்பினன் சென்னியனாகிய சேஎயின் சேவடி படரும் உள்ளமொடு செல்லும் செலவை நீ நயந்தனையாயின, நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே