உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம்-38

(உ-டை) வேறுபட்ட பல துகிற் கொடிகளைப்போல அசைந்து அகிற்கட்டைகளைச் சுமந்து சந்தனமரத்தை உருட்டி சிறுமூங்கிலின் பூவுடைய அசையும் கிளைமுரிய வேரைப் பிளந்து, விண்ணைத்தொடும் பெரிய மலையில் ஞாயிற்றைப் போலத் தொடுத்து வைக்கப்பட்ட தேன்கூட்டைச் சிதைத்து, நல்ல பல ஈரப்பலாவின் முற்றிய சுளை தன்னொடு கலக்கப் பண்ணி மலைமேல் உள்ள சுரபுன்னையின் நறுமலரை உதிர்த்து, கருங்குரங்குடன் கரிய முகத்தையுடைய ஆண்முசுக்குரங்கை நடுங்கச்செய்து, புள்ளிகளையுடைய முகத்தைக்கொண்ட பெரிய பெண்யானை குளிரும்படி வீசி, பெரிய யானையின் முத்துடைய வெண்கொம்புகளை அள்ளி, தாவி விழுந்து நல்லபொன்னும் மணியும் மேலும் நிறம் விளங்குமாறு செய்து, பொன்னைத் தெள்ளிக் கொழித்து, வாழையின் அடி முரியவும், தென்னையின் இளநீர்க்குலை உதிரவும் மோதித் தாக்கி, மிளகுக் கொடியின் கரிய கொத்துகளைச் சாய்த்து, தோகைகளையுடைய புறத்தையும் மெல்லிய நடையையும் உடைய மயில்கள் பலவற்றுடன் பெட்டைக் கோழிகள் அஞ்சி அழிந்தோடச் செய்து, ஆண் பன்றியுடன், உள்ளே சோறுடைய கரிய பனையின் புல்லிய செறும்புபோன்ற நிறமுடைய கருமயிரைக் கொண்ட உடலையும், வளைந்த அடியையும் உடைய கரடி பெரிய கற்பாறை வெடிப் பாகிய குகையுள் ஒடுங்க, கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுவின் காளை முழக்கம் செய்ய, மலையின் உச்சியில் இருந்து 'இழும்' என்னும் ஒலியெழ ஒழுகும் அருவியையுடைய பழம் முதிர்ந்த சோலைகளையுடைய மலைக்கு உரிமையாளனாகிய முருகப்பெருமான். (296 - 317)

வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து ஆர முழுமுதல் உருட்டி வேரல்

பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த

300. தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்

இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று

305 முத்துடை வான்கோடு தரீஇத் தத்துற்று நன்பொன் மணிநிறங் கிளரப்பொன் கொழியா