உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 38.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை

-

29

282. கூளியர் - பூத கணங்களாகிய பணியாளர்; 283. சாறு அயர்- விழாக் கொள்ளும்; வீறுபெற பொலிவுபெற; 284. அளியன் - இரங்கத்தக்கவன்;முதுவாய் - முதுமையும் வாய்மையும் 285 நயந்து - விரும்பி;

(உ டை) அவ்வளவில், தெய்வத்தன்மை வாய்ந்த வலிமையான வடிவத்தையும், வானத்தைத் தொடும் வளர்த்தி யினையும் உடைய முருகன் உனக்கு முன்னர்த்தோன்றி, வருத்துதல் அமைந்த தன் தெய்வ ஒளியை அடக்கிக்கொண்டு, பழமையான தனது மணங்கமழ்கின்ற தெய்வநலங்கனிந்த இளமையான திருவடிவைக் காட்டுவான்; 'அஞ்சாது கொள்க நீ; வீடுபேற்றை நினைத்துவந்த நின் நினைவை நான் அறிவேன்' என்று அன்பால் நன்மொழிகளைக் கலந்துரைப்பன். கருநிறமுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் நீ கேடு இல்லாமல் ஒப்பற்ற ஒருவனாகத் தோன்றுமாறு சிறந்த பெறுதற்கரிய பரிசை வழங்குவன் (287 -

295)

தெய்வம் சான்ற திறல்விளங் குருவின் வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்

290 மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி அஞ்சல் ஓம்புமதி அறிவன்நின் வரவென அன்புடை நன்மொழி அளைஇ விளிவின்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ யாகித் தோன்ற விழுமிய

295. பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன்

-

-

(கு - ரை) 287. சான்ற - அமைந்த, வாய்ந்த; திறல் - வலிமை; 288. நிவப்பு வளர்த்தி, உயரம்; 289. அணங்கு சால் உயர்நிலை- வருத்துதல் அமைந்த உயர்ந்த ஒளிநிலை; தரீஇ அடக்கி அமைத்து; 290. இளநலம் - இளமையான நல்ல வடிவம்; 291. அஞ்சல் ஓம்பு மதி - அஞ்சாதே கொள்க; 292. அளைஇ - கலந்து; விளிவு இன்று கேடு இல்லாமல்; 293. இருள் நிறம் - கருநிறம்; முந்நீர் - கடல்; 295. பெறலரும் பெறுவதற்கு அரிய; நல்குமதி நல்கும்;

-

-

அவன் யாவன் எனிற் கூறுவன்.